காலையிலேயே கோயிலுக்கு போய் பயபக்தியுடன் வேண்டிக்கொண்ட பசவராஜ் பொம்மை, எடியூரப்பா.. பரபரப்பு பேட்டி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹுப்பாலியில் உள்ள ஹனுமான் கோவிலில் முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று காலை வழிபாடு செய்தார். அவர் ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
Recommended Video
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, தனது சொந்த தொகுதியில் வாக்களிக்கும் முன், தனது மகன் பிஒய் விஜயேந்திராவுடன் ஷிகாரிபுராவில் உள்ள ஹுச்சராயா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். விஜயேந்திரர் தனது தந்தை எடியூரப்பா போட்டியிடும் பாரம்பரிய தொகுதியான ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி ( இன்று) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி அறிவித்தது.
அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த ஏப்ரல் 13-ந் தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் முடிந்தது. இதையடுத்து 21-ந்தேதி மனுக்கள் பரிசீலனையும், 24-ந்தேதி மனுக்கள் வாபஸ் பெறுதலும் நடந்தது. அதைத்தொடர்ந்து 24-ந்தேதி மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இறுதி வேட்பாளர் பட்டியல்: அதன்படி 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் (மேல்கோட்டை தொகுதியில் மறைந்த விவசாய கட்சி தலைவர் புட்டண்ணய்யா மகன் தர்ஷனுக்கு ஆதரவு), ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடந்து வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி படைத்தவர்கள் ஆவர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், பிற வாக்காளர்கள் 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இதில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 பேர் இளம் வாக்காளர்கள், 5 லட்சத்து 71 ஆயிரத்து 281 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார்கள். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 920 பேர் உள்ளனர். இந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
#WATCH | #KarnatakaElections | Former Karnataka CM and senior BJP leader BS Yediyurappa visits and offers prayers at Sri Huccharaya Swami Temple in Shikaripur, along with his family.
— ANI (@ANI) May 10, 2023
His son, BY Vijayendra is contesting from the Assembly constituency. pic.twitter.com/ncasRIzhNe
காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹுப்பாலியில் உள்ள ஹனுமான் கோவிலில் முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று காலை வழிபாடு செய்தார். அவர் ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். வாக்களிக்க சென்ற போது பேட்டி அளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
#WATCH | Karnataka CM Basavaraj Bommai offered prayers at a Hanuman temple in Hubbali as voting continues across the state. He is contesting as a BJP candidate from Shiggaon assembly constituency.#KarnatakaElections pic.twitter.com/LGbOwJ1MWE
— ANI (@ANI) May 10, 2023
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, தனது சொந்த தொகுதியில் வாக்களிக்கும் முன், தனது மகன் பிஒய் விஜயேந்திராவுடன் ஷிகாரிபுராவில் உள்ள ஹுச்சராயா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். விஜயேந்திரர் தனது தந்தை எடியூரப்பா போட்டியிடும் பாரம்பரிய தொகுதியான ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதனிடையே எடியூரப்பா செய்தியாளர்களிடம் இன்று கூறும் போது, கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிதான்.. சந்தேகம் எதுவும் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications