எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை- கர்நாடகா முதல்வர் பொம்மை உருக்கம்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை என கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் பாஜக 68 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 127 இடங்களிலும் ஜேடிஎஸ் 22 இடங்களிலும் மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.அது போல் 4 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலை வகித்து வருகிறார்கள். மலூர், கவுரிபிதனூர், அஃப்சல்புரில், ஹரப்பனஹள்ளிஆகிய 4 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலையில் இருக்கிறார்கள்.
இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில் கர்நாடகா தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெறமுடியவில்லை. தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகே தோல்விக்கான காரணங்களை ஆராய முடியும். கர்நாடக தேர்தல் முடிவுகளை பாஜகவின் முன்னேற்றத்திற்காக எடுத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடிக்கும் என தெரிகிறது. இதையடுத்து பாஜகவின் குதிரை பேரத்தில் சிக்காமல் இருக்க முன்னிலை வகித்து வரும் வேட்பாளர்களை ஹெலிகாப்டர் மூலம் வேறு எங்கோ பாஜக தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் வைக்க முடிவு செய்துள்ளது. பாஜக 80 ஐ எட்டிவிட்டால் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் இருந்தாலும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு காங்கிரஸை உடைக்கும் என்பதால் காங்கிரஸ் தங்கள் தரப்பினரை உஷார்படுத்தி வருகிறது.
அனைத்து பூத்துகள் மற்றும் தொகுதிகளில் இருந்தும் முதற்கட்ட தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. நாங்கள் நிச்சயம் மேஜிக் நம்பரை தாண்டி அதிக இடங்களில் வெற்றி பெருவோம் என்ற நம்பிக்கை உள்ளது என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி அதன் வேட்பாளர்களை ஒன்றாக வைத்திருப்பதற்காக ரெசார்ட்டுகளில் அறை முன்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பொம்மை, "அவர்களின் எம்எல்ஏக்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மை பெற முடியாது. அதனால் தான் அவர்கள் பிற கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவது உறுதி என்பதால் எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. காங்கிரஸ் கட்சி எந்த கூட்டம் வேண்டுமானாலும் நடத்தட்டும். அதை நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications