திடீரென பெங்களூரில்.. சித்தராமையா வீட்டு முன்பாக போலீஸ் குவிப்பு! என்ன காரணம்?
பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்விக்கு நடுவே பெங்களூரில் குமாரகிருபா ரோட்டில் உள்ள சித்தராமையாவின் வீட்டு முன்பு போலீசார் குவிக்கபப்ட்டுள்ளனர். திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. தனி மெஜாரிட்டிக்கு தேவயைான 113 இடங்களை விட அதிகமாக அதாவது 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் முதல்வர் பதவிக்கு டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இவர்கள் 2 பேரும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க விரும்பாமல் பிடிவாதம் பிடிக்கின்றனர். இவர்கள் 2 பேரையும் நேற்று மல்லிகார்ஜூன கார்கே தனித்தனியே சந்தித்து பேசினார். அதன்பிறகு இன்று ராகுல் காந்தி இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் தான் சற்று நேரத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வரின் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவிக்க உள்ளது. இதற்கிடையே தான் பெங்களூர் குமாரகிருபா ரோட்டில் உள்ள சித்தராமையாவின் இல்லத்தை சுற்றி இன்று திடீரென போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கேஎஸ்ஆர்பி உள்பட கர்நாடகா போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென போலீசார் குவிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரித்தபோது இன்று கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கப்பட உள்ளது. முதல்வர் பதவிக்கு சித்தராமையாவின் பெயர் பைனல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்றவர்களின் ஆதரவாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாம் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications