கர்நாடகாவில் உடையும் காங்கிரஸ்? "சித்தராமையா vs சிவக்குமார்.." டெல்லி தலைமைக்கு எகிறும் பிரஷர்!
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பாக பெரும் குழப்பம் நிலவி வருகிறது. சித்தராமையா அங்கு முதல்வராக இருக்கும் சூழலில்.. அவரை மாற்றிவிட்டு டிகே சிவக்குமாரை முதல்வர் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பிரஷர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடக காங்கிரஸே உடையும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் இப்போது ஒரு புதிய அரசியல் சூறாவளி உருவாகியுள்ளது. அங்குக் கடந்த 2023 காங்கிரஸ் வென்று ஆட்சியை அமைத்தபோது 2.5 ஆண்டுகள் சித்தராமையா முதல்வர், அதன் பிறகு டிகே சிவக்குமார் முதல்வர் என பிரித்துக் கொள்ள ஒப்புக் கொண்டனர். இப்போது 2.5 ஆண்டுகள் ஆகும் நிலையில், டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் கோரிக்கை.

முதல்வர் பதவி ஒப்பந்தம்
கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்களில்.. அதாவது 2023ம் ஆண்டு மே 18ம் தேதி தான் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. சித்தராமையா, சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேசி வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் டிகே சுரேஷ் (சிவக்குமாரின் சகோதரர்) ஆகியோர் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவை எட்டியதாக சிவக்குமார் தரப்பு கூறுகிறது.
முதல் 2.5 ஆண்டுகள் தான் முதல்வராக இருக்கிறேன் என்றே சிவக்குமார் சொல்லி இருக்கிறார். இருப்பினும், தனது வயதைக் காரணம் காட்டி சித்தராமையா அதை மறுத்தார். இறுதியில் ஒரு சமரசம் எட்டப்பட்டது.. சித்தராமையா முதல் பாதியிலும், சிவக்குமார் மீதமுள்ள காலத்திற்கும் தலைமை ஏற்பார் என முடிவு செய்யப்பட்டது.. அப்போதே இதைப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என டிகே சிவக்குமார் சகோதரர் சுரேஷ் வலியுறுத்தியிருக்கிறார். இருப்பினும், இது அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் பொதுவெளியில் அறிவிக்க மறுத்துவிட்டார்கள்.
டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள்
சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றே டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் வலியுறுத்துகிறார்கள். சித்தராமையாவுக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு பதவிகளை வழங்கியுள்ளதாகச் சொல்லும் டிகே சிவக்குமார் தரப்பு, இதனால் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பு வருக்கு உள்ளதாகச் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவர், 7+ ஆண்டுகள் முதலமைச்சர், பின்னர் ஒன்றரை ஆண்டுகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எனப் பல பதவிகளை வகித்த சித்தராமையா கடைசி நேரத்தில் பிரச்சினை செய்யக்கூடாது என அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது சிவக்குமார் ஆதரவு அமைச்சர்கள் சிலருக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களில் திருப்தி இல்லை. இருப்பினும், முதல் 2.5 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த இலாக்காக்கள் இருக்கும் என்றும் பின்னர் தலைமை மாற்றம் ஏற்படும்போது அமைச்சரவை மாற்றப்படும் என்றும் தங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டதை சிவக்குமார் ஆதரவு அமைச்சர்கள் நினைவு கூருகிறார்கள்.
சித்தராமையா
முதலில் சித்தராமையா இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், பின்னாட்களில் அவரது நிலைப்பாடு மாறியதாக தெரிகிறது.. ஆரம்பத்தில் காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும் என்ற அவர் பிறகுத் தனது டோனை மாற்றினார். ஜூலை 2ம் தேதி 5 ஆண்டுகள் முழுமையாக நானே முதல்வராகத் தொடர்வேன் என அவர் சொன்னார். அப்போது முதல் நவம்பர் 21 வரை பல முறை அவர் முதல்வர் பதவியில் தொடர்வேன் என சொல்லி வந்தார்
இந்தச் சூழலில் தான் நவம்பர் 22ம் தேதி பெங்களூரில் கார்கேவை சித்தராமையா சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு சித்தராமையா வாய்ஸ் மீண்டும் மாறியது. முதல்வர் பதவி குறித்து தலைமை முடிவு செய்யும் என்றும் தலைமை முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்றும் சொன்னார். மேலும், தலைமை விரும்பினால் மட்டுமே முதல்வர் பதவியில் தொடர்வேன் என்றார்.
மவுனம்
டிகே சிவக்குமாரை பொறுத்தவரை அவர் பொதுவெளியில் அமைதி காக்கிறார். அவர் ஒருபோதும் முதல்வர் பதவி மாறும் எனச் சொல்லவே இல்லை. மாறாக சித்தராமையாவுக்கு ஆதரவாகவே பொதுவெளியில் பேசி வருகிறார். அதிருப்தியில் இருந்தாலும் கூட சித்தராமையா மற்றும் காங்கிரஸுக்கு எதிராகக் கலகம் செய்யவோ கட்சியை உடைக்கவோ வாய்ப்பே இல்லை என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். பொறுமையாக இருக்க சித்தராமையா முடிவு செய்துள்ளார். அவரது எம்எல்ஏக்கள் தற்போது டெல்லியில் முகாமிட்டு, தலைமைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இப்போது அனைவரின் பார்வையும் காங்கிரஸ் உயர்மட்ட தலைமை மீது திரும்பியுள்ளது. காலக்கெடு நெருங்கி வருவதாலும், இரு முகாம்களிலிருந்தும் அழுத்தம் அதிகரிப்பதாலும் டெல்லி தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதிலேயே எதிர்பார்ப்பு நிலவுகிறது. கர்நாடக காங்கிரஸில் பிளவு ஏற்படாமல் இருக்கும் வகையில் முடிவெடுக்கக் காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications