கர்நாடகாவின் மேகதாது அணை - டிகே சிவகுமார் தலைமையில் இன்று ஆலோசனை- முக்கிய அறிவிப்பு வெளியாகும்?
பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடகா மாநில அரசு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. கர்நாடகா துணை முதல்வரும் நீர்வளத்துறை, பெங்களூர் மேம்பாட்டு துறை அமைச்சருமான டிகே சிவகுமார் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு ஏற்கனவே மேகதாது அணை கட்ட ரூ9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸும் மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பாதயாத்திரை மேற்கொண்டது. இப்பாதயாத்திரையை நடத்தியவர்தான் தற்போதைய துணை முதல்வர் டிகே சிவகுமார்தான்.

நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் மேகதாது அணை கட்டுவதற்கு ரூ9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது.
பெங்களூர் மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பெங்களூர் மாநகர குடிநீர் தேவைக்காக என்று சொல்லி மேகதாது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடகா காங்கிரஸ் அரசு விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இன்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் டிகே சிவகுமார் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் மேகதாது அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிடக் கூடும்.
கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மேகதாது அணை கட்டும் விவகாரத்தை கர்நாடகா கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications