கர்நாடகா காங்கிரஸ் அரசை காவு வாங்கப் போகிறதா 'வால்மீகி வளர்ச்சி ஆணைய' அதிகாரி தற்கொலை? என்ன நடந்தது?
பெங்களூர்: கர்நாடகா வால்மீகி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரி சந்திரசேகர் தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் நாகேந்திராவை பதவி விலக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு வால்மீகி வளர்ச்சி ஆணைய விவகாரம் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். எதிர்க்கட்சியான பாஜக என்னதான் எம்.எல்.ஏக்களை விலைக்கே வாங்கினாலும் காங்கிரஸ் அரசை கவிழ்க்கவே முடியாது என்ற பலத்துடன் முதல்வர் சித்தராமையா வலிமையான பலத்துடன் இருக்கிறார்.

காங்கிரஸ் அரசுக்கு குடைச்சல்: இருந்தபோதும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் நீடிக்கும் உட்கட்சி மோதல்கள் காங்கிரஸ் அரசை காவு வாங்குமோ என்கிற சூழ்நிலையை அவ்வப்போது உருவாக்குகிறது. அதேபோல பாஜக தலைவர்களும் லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும் என தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனாலும் இதனை காங்கிரஸ் எதிர்கொள்ள தயார் என கூறி வருகிறது.
அதிகாரியின் தற்கொலை: இந்த நிலையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாகவும் நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது வால்மீகி வளர்ச்சி ஆணைய அதிகாரி சந்திரசேகர் தற்கொலை. பெங்களூர் வசந்த்நகரில் உள்ளது வால்மீகி வளர்ச்சி ஆணையம். இதன் அதிகாரியாகப் பணியாற்றிய சந்திரசேகர்( வயது 52) ஷிமோகாவில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை கடிதத்தில் என்ன இருந்தது?: சந்திரசேகர் தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில், வால்மீகி சமூக வளர்ச்சி ஆணையத்துக்கு மாநில அரசு ரூ187 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆணையத்தின் 3 அதிகாரிகள் ரூ85 கோடியை பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி சுருட்டிக் கொண்டனர். இது குறித்து அதிகாரி என்ற முறையில் அவர்களிடம் கேட்டேன். இதற்காக எனக்கு பெரும் தொல்லை கொடுத்தனர். இதனால் மனமுடைந்து நான் தற்கொலை செய்கிறேன் என சந்திரசேகர் கடிதத்தில் எழுதி இருந்தார்.
சித்தராமையா உத்தரவு: இந்த விவகாரம்தான் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. சந்திரசேகரின் மரணத்தைத் தொடர்ந்து அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, ஜேடிஎஸ் கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால் நாகேந்திரா ராஜினாமா செய்ய மறுத்தார். தற்போது நாகேந்திராவை ராஜினாமா செய்ய வைத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார் முதல்வர் சித்தராமையா. இதனால் நாகேந்திராவை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளார் சித்தராமையா.
நாகேந்திரா நிலைப்பாடு: ஆனால் நாகேந்திராவோ, அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களது கையெழுத்து போலியாகப் போடப்பட்டுள்ளது என்கின்றனர். இந்த முறைகேட்டுக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லாத நிலையில் நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என கொந்தளித்திருந்தார். தற்போது முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து பரபரப்பான அரசியல் திருப்பங்கள் நிகழக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என்கின்றனர் கர்நாடகாவின் மூத்த பத்திரிகையாளர்கள். நாகேந்திரா ராஜினாமா செய்தாலும் இதனை வைத்து பாஜக அடுத்த கட்ட அரசியலை தீவிரமாகவே முன்னெடுக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்











Click it and Unblock the Notifications