சித்தராமையாவுக்கு ஆதரவாக போராடினால்.. இப்படி விபரீதம் நடக்குதா? 'மரண பீதியில்' கர்நாடகா காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மூடா முறைகேடு புகாரில் சிக்கியதால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாஜக, ஜேடிஎஸ் இணைந்து சித்தராமையாவை ராஜினாமா செய்ய வைக்க பகீர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சித்தராமையாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்கும் கர்நாடகா காங்கிரஸ் கட்சியினரை அச்சப்பட வைக்கும் அளவுக்கு அடுத்தடுத்த விபரீதங்கள் அரங்கேறி வருகின்றன.

மூடா என்கிற மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமானது, சித்தராமையா மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த ஒதுக்கீடு சட்டவிரோதம் என்கின்றன பாஜக, ஜேடிஎஸ். ஆனால் நட்ட ஈடாக மூடா கொடுத்ததுதான் 14 வீட்டு மனைகள் என்கிறார் சித்தராமையா.

karnataka siddaramaiah


இந்த விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்தார். இதனால் கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா ஆளுநரின் அனுமதிக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற, சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையா மீதான விசாரணைக்குத் தடை விதித்தது.

இந்த நிலையில் சித்தராமையா பதவி விலக கோரி பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம், ஆளுநர் கெலாட் அனுமதி கொடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.

கர்நாடகாவின் யாதகிரி டவுனில், சித்தராமையாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சித்தராமையா ஆதரவாளரான ராஜ்குமார் கணேஷ் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூரில் சித்தராமையா ஆதரவாளரான சிகே ரவிச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ரவிச்சந்திரன் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாரடைப்பு காரணமாக ரவிச்சந்திரன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்தது. சித்தராமையாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாவது காங்கிரஸ் கட்சியினரிடையே பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+