பலாத்கார வழக்கு! நித்யானந்தா எங்கே? சத்சங்க வீடியோக்களில் க்ளூ தேடும் போலீஸ்.. விரைவில் கைது?
பெங்களூர்: பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் நித்யானந்தாவிற்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் அவரை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
Recommended Video
பெங்களூர் பிடதி ஆசிரமத்தை தொடங்கிய நித்யானந்தா, கடந்த 2010 ஆம் ஆண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரில் நித்யானந்தாவை ஆஜராகுமாறு ராம்நகர் கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து பல முறை கைது வாரண்ட் பிறப்பித்தும் அவரை போலீஸார் கைது செய்யவும் இல்லை, அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை மட்டும் நடைபெற்று வருகிறது.

3 சாட்சியங்கள்
இந்த விவகாரத்தில் 3 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. எனினும் நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அந்த வழக்கு 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பல முறை சம்மன் அனுப்பியும் நித்யானந்தா பதில் தரவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டே நித்யானந்தாவின் கார் ஓட்டுநர் லெனின் அவருக்கு எதிராக பாலியல் வழக்கை பதிவு செய்தார்.

நித்யானந்தா கைது
அந்த வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நித்யானந்தா இந்தியாவை விட்டே தப்பி ஓடிவிட்டார் என லெனின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த புகாரை அடிப்படையாக கொண்டு நித்யானந்தாவின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

புகார்
அந்த புகாரில் லெனின் கூறுகையில், நித்யானந்தா இந்தியாவை விட்டு தப்பியோடி, கைலாசா எனும் ஆசிரமத்தை வெளிநாட்டில் தொடங்கிவிட்டார் என கூறப்பட்டிருந்தது. எனினும் இந்த கைலாசா ஆசிரம விவகாரம் குறித்து எந்த உறுதியான தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.

செப்டம்பர் 23க்குள் கைது
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 2019 ஆம் ஆண்டு முதல் பல முறை சம்மன் அனுப்பியும் எந்த பதிலையும் தராமல் நேரில் ஆஜராகாமல் இருந்ததால் நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் செப்டம்பர் 23 ஆம் தேதிக்குள் கைது செய்யப்படுவார் அல்லது நேரில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது. இதனால் போலீஸார் இன்டர்போல் உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய முனைப்பு காட்டி வருகிறது. அடுத்தகட்டமாக கைலாசா எங்கே இருக்கிறது என்பதை அவரது வீடியோக்களை வைத்து போலீஸார் ஆய்வு செய்கிறார்கள். நான் இருக்கும் அறையை சுற்றி பனி படர்ந்த மலைகள் இருப்பதாக நித்யானந்தா பலமுறை கூறியுள்ள நிலையில் அந்த இடம் உண்மையில் கைலாசாதானா இல்லை நேபாளத்தில் நித்தி பதுங்கியிருக்கிறாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நித்யானந்தாவுக்கு உடல்நிலை பாதிப்பு
நித்யானந்தா அண்மைக்காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது பேஸ்புக்கில் அவர் சமாதி நிலையில் இருப்பதாகவும் செயற்கை சுவாசம் வைக்கப்பட்டதாகவும் பதிவுகள் வெளிவந்தன. நித்யானந்தாவுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க அவரது சீடர்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை நித்யானந்தாவை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அப்போது கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருந்த நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications