Dharmasthala: சிக்கிய எலும்புகூடு.. நாட்டையை உலுக்கும் தர்மஸ்தலா புதைக்குழி வழக்கில் பெரும் திருப்பம்.. எஸ்ஐடி அதிரடி
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் மாணவிகள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலை சுற்றிய இடங்களில் 25 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி உடல்களை தேடும் பணி நடந்து வரும் நிலையில் சிதைந்த மனித எலும்பு கூடு கிடைத்துள்ளது. இது இந்த வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலா என்ற இடம் உள்ளது. இங்குள்ள மஞ்சுநாதர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. மூலவராக சிவன் இருக்கிறார். இந்த கோவிலுக்கு கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் கடந்த ஜூன் மாதம் போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் மொத்த கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் அந்த புகாரில், 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் வரை கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றினேன். தர்மஸ்தலா கோவிலில் பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டேன். அவர்களின் உடல்களில் ஆசிட் தழும்புகள், காயங்கள் இருந்தன என்று கூறியிருந்தார். இந்த புகார் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதையடுத்து கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்த விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாஜி தூய்மை பணியாளர் கூறிய இடத்தில் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 13 இடங்களில் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த கோவில் தர்மஸ்தலாவில் ஓடும் நேத்ராவதி நதிகரையோரம் அமைந்துள்ளது. இதனால் நேத்ராவதி கரையோரம் உடல்களை தேடும் பணியில் அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். 25 அடி ஆழம் வரை தோண்டி உடல்கள் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று 6வது இடத்தில் பள்ளம் தோண்டி உடல்கள் தேடப்பட்டது. அப்போது சிதைந்த மனித எலும்புகூடு கிடைத்துள்ளது.
அது ஆணின் எலும்புகூடு என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை எலும்புகூடு சிக்காத நிலையில் இப்போது கிடைத்துள்ளது. இது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications