‛‛என் மாமாவை ஜெயிக்க வையுங்க’’.. வாக்கை காப்பாற்றிய நடிகர் சுதீப்.. குஷியில் பசவராஜ் பொம்மை.. ஆஹா
பெங்களூர்: கன்னட நடிகர் கிச்சா சுதீப், மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுடன் சேர்ந்து தீவிர பிரசாரம் செய்தார். பசவராஜ் பொம்மைக்கு கொடுத்த சத்தியத்தை கடைப்பிடிக்கும் வகையில் நடிகர் சுதீப், ‛எனது மாமா பசவராஜ் பொம்மையை ஜெயிக்க வையுங்க'' என பேசி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. முதல்வராக உள்ள பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆளும் பாஜக அரசு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டுகள் பசவராஜ் பொம்மையின் அரசுக்கு எதிராக பெரிய பிரச்சனையாக உருவானது.

இதற்கிடையே தான் பல்வேறு சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் சீனியர் லீடர்களுக்கு பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளில் இணைந்து களமிறங்கி உள்ளனர். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, நடிகர் கிச்சா சுதீப் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். பாஜகவில் இணைய மறுத்த சுதீப், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை மற்றும் அவர் கூறும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். சினிமா துறையில் கால்பதித்தபோது பல சிரமங்களை சந்தித்தபோது மாமா பசவராஜ் பொம்மை தான் பக்கபலமாக இருந்ததாக தெரிவித்த சுதீப், அதற்கு நன்றியாக பிரசாரம் செய்வதாக உறுதியளித்தார்.

அதன்படி நடிகர் கிச்சா சுதீப், பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கியுள்ளார். பசவராஜ் பொம்மை போட்டியிடும் ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதியில் சுதீப் களமிறங்கி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அதாவது நேற்று பசவராஜ் பொம்மை 2வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, நடிகர் சுதீப் ஆகியோருடன் வாகனத்தில் ஊர்வலமாக சென்ற பசவராஜ் பொம்மை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து சிக்கான் பகுதியில் இருந்து நடிகர் சுதீப் பிரசாரத்தை தொடங்கினார். அதன்பிறகு நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் நடிகர் சுதீப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நான் முதல் முதலாக இந்த ஊருக்கு வந்துள்ளேன். நல்ல வரவேற்பு அளித்தனர். அதற்கு நன்றி. கனகதாசர் மற்றும் சிசுநாலா ஷெரீப் ஆகியோர் பிறந்த இடத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கியதில் மகிழ்ச்சி. குறைந்த காலத்தில் அதிக பணிகளை மாமா பசவராஜ் பொம்மை செய்துள்ளார்.

மாமா பசவராஜ் பொம்மைக்கு மக்கள் பணியாற்ற குறைந்த காலமே கிடைத்துள்ளது. இதனால் அவருக்கு இன்னும் வாய்ப்பளிக்க வேண்டும். இந்த வாய்ப்பை வழங்கும்படி கேட்க தான் நான் வந்துள்ளேன். சிக்கான் தொகுதியில் மாமா பசவராஜ் பொம்மை நிச்சயம் வெற்றி பெறுவார். ஏனென்றால் அவர் மிகவும் நல்லவர். ஒரு இந்தியனாக நான் பெருமைப்படுகிறேன். ஏனெ்னறால் பிரதமர் மோடி நாட்டுக்காக சிறப்பான பணிகளை செய்துள்ளார். வெளிநாடுகளிலும் இந்தியா பற்றிய பேச்சுவார்த்தை நல்ல விதமாக உள்ளது'' என கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications