38 ஆண்டு கால வரலாற்றை மாற்றும் பாஜக.. காங்கிரசுக்கு ஷாக்.. நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு
பெங்களூர்: 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று நியூஸ் நேஷனின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மக்கள் விறு விறுப்பாக ஆர்வமுடன் வாக்களித்தனர். கர்நாடகவை பொறுத்தவரை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க அங்கு 113 தொகுதிகளை வென்றாக வேண்டும்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானாவை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்றே கூறியிருந்தன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக 114 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி 86 இடங்களிலும், ஜேடிஎஸ் 21 இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆட்சி அமைக்க 113 இடங்களில் வென்றால் போதும் என்ற நிலையில், பாஜக 114 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்கிறது நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு.
இதன் மூலம் கர்நாடகாவில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்காது என்ற 38 ஆண்டு கால வரலாற்றை பாஜக மாற்றும் என்பது நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு முடிவு. கர்நாடகாவை பொறுத்தவரை கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. 38 ஆண்டுகளாக ஆட்சி மாறி மாறி அமைந்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications