நாளை ஓட்டுப்பதிவு.. சாதி அரசியலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள்.. பின்னணியில் மெகா பிளான்! ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் மிகப்பெரிய அஸ்திரமான சாதியை வைத்து சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டுள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு
கர்நாடகா சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 13ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் பிரசாரம் நிறைவு பெற்றது.

இந்த தேர்தலில் பாஜக 224 சட்டசபை தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில், ஜேடிஎஸ் 207 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இதுதவிர ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்பட வெவ்வேறு கட்சிகளும், சுயேச்சைகளும் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தான் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் இந்த தேர்தலில் அனைத்து சாதி ஓட்டுகளை தங்கள் வசம் கவர சிறப்பான முயற்சி மேற்கொண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
லிங்காயத்: கர்நாடகாவில் ஓபிசி பிரிவில் லிங்காயத் என்ற சமூகம் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 17 சதவீதம் ஆவார்கள். சிவன் வழிபாட்டை மேற்கொள்ளும் இவர்கள் 12ம் நூற்றாண்டு சீர்த்திருத்தவாதியான பசவண்ணரின் கொள்கையை பின்பற்றி வருகின்றனர். விவசாயம், வியாபாரம் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான்.
பாஜகவின் ஓட்டு வங்கி: இந்த லிங்காயத் சமுதாயம் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளது. எடியூரப்பாவை நம்பித்தான் லிங்காயத் சமுதாயத்தினர் பாஜகவுக்கு ஓட்டு அளித்து வந்தனர். தற்போது எடியூரப்பா அரசியலில் ஓய்வு பெற்றுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட சில முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர். இதற்கிடையே தான் லிங்காயத் ஓட்டுகளை தக்கவைக்க பாஜக மாற்று திட்டத்தை கையில் எடுத்தது. அதன்படி முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்பபெற்று லிங்காயத், ஒக்கலிகர் சமுதாயத்துக்கு தலா 2 சதவீதம் வழங்கி உள்ளது. இதன்மூலம் லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் வாக்குகளை கவர பாஜக முயற்சித்துள்ளது.

எத்தனை வேட்பாளர்கள்: மேலும் இந்த முறை பாஜக 68 தொகுதிகளில் லிங்காயத் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இது கடந்த 2018 தேர்தலை ஒப்பிடும்போது அதிகம். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் லிங்காயத் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த தேர்தலில் 41 லிங்காயத் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கிய காங்கிரஸ் இந்த முறை 51 பேருக்கு சீட் வழங்கி இருக்கிறது. அதன்படி பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சி லிங்காயத் ஓட்டுகளை குறிவைத்து ஈர்க்க முயற்சி செய்து வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
ஒக்கலிகர்: கர்நாடகாவில் 15 சதவீத மக்கள் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். குறிப்பாக பழைய மைசூர் பகுதிகளில் அதிகளவில் வசிக்கின்றனர். ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு வங்கி என்பது இந்த சமுதாயத்தினர் தான். ஏனென்றால் ஜேடிஎஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் குமாரசாமி இந்த சமுதாயத்தை சேர்ந்தவர். அதன்பிறகு குறிப்பிட்ட ஓட்டுகளை காங்கிரஸ் கட்சி பெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமாரும் இந்த கட்சியை சேர்ந்தவர் தான். இதனால் தான் எப்போதும் ஒக்கலிகர் ஓட்டுகள் ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு தான் கிடைக்கும்.
பாஜகவின் முயற்சி: இந்த முறை பாஜகவும் ஒக்கலிகர் ஓட்டுகளை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி தான் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து 2 சதவீத இடஒதுக்கீட்டை ஒக்கலிகர் சமுதாயத்துக்கு மாநில பாஜக அரசு வழங்கி உள்ளது. இதன்மூலம் ஒக்கலிகர் சமுதாய ஓட்டுகளை ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பிரித்து பயனடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் எவ்வளவு: காங்கிரஸ் கட்சியில் கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 41 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது தற்போது 43 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 2018 தேர்தலில் 24 ஒக்கலிகர் எம்எல்ஏக்களை பெற்ற ஜேடிஎஸ் கட்சி தற்போது 45 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
இஸ்லாமியர்கள்: பாஜக மேற்கூறியபடி தேர்தல் நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் அதற்கு நிகராக காங்கிரஸ் கட்சியும் வியூகம் வகுத்துள்ளது. அதன்படி பாஜக ரத்து செய்த 4 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை தங்களால் முழுமையாக கவர முடியும் என்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குருபா: கர்நாடகாவில் அடுத்த முக்கிய சமுதாயம் என்பது குருபா. ஓபிசி பிரிவில் உள்ள இந்த சமுதாயம் கர்நாடகாவில் அதிக மக்கள்தொகையை கொண்டுள்ளது. அதாவது கர்நாடகா மக்கள் தொகையில் 9 சதவீதம் வரை இந்த மக்கள் வசிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, பாஜகவின் முன்னாள் அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா உள்ளிட்டவர்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர் தான். சித்தராமையா முதல்வராக வாய்ப்புள்ளதால் அவரை நம்பி இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கின்றனர்.
எஸ்.சி., எஸ்.டி மக்கள்: கர்நாடகா மக்கள் தொகையில் 24 சதவீதம் வரை ஆதிதிராவிடர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) சமுதாய மக்கள் உள்ளனர். 224 தொகுதிகளில் 36 எஸ்சி தனி தொகுதியும், 15 எஸ்டி தனி தொகுதியும் உள்ளது. மொத்தமாக கணக்கீட்டு பார்த்தால் 100 இடங்களில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். எஸ்சி சமுதாயத்தை பொறுத்தவரை அங்கு வலது, இடது என 2 பிரிவுகளாக உள்ளனர். இதில் எஸ்சி (வலது) பிரிவினர் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கியாகவும், எஸ்சி (இடது) பிரிவினர் பாஜகவினரின் பக்கமாகவும் உள்ளனர்.
பாஜக பிளான்: இதற்கிடையே தான் இந்த 2 சமுதாய மக்களின் ஓட்டுக்களை கவரும் வகையில் பாஜக அரசு எஸ்சி இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. எஸ்சி (இடது) பிரிவினரின் கோரிக்கையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல் எஸ்டி இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதன்மூலம் பாஜகவுக்கு ஆதிதிராவிடர்களின் வாக்கு கிடைக்கும் எனும் சூழலில் இந்த இடஒதுக்கீடு அறிவிப்புக்கு பாஜகவின் ஓட்டு வங்கியாக இருக்கும் பிற துணை பிரிவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் எஸ்சிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 36 இடங்களில் இந்த சாதிகளை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications