Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிடி ரவி தோல்வி! இந்திராவின் பேத்தி நான்! சொல்லியடித்த பிரியங்கா! பாஜக கோட்டை தகர்ந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சிடி ரவி தோல்வியடைந்தார். பாஜகவின் கோட்டையாக இருந்த சிக்கமகளூர் தொகுதியில் அவரை காங்கிரஸ் வேட்பாளர் தோற்கடித்தார். இந்நிலையில் தான் சிடி ரவி தோற்றதோடு, அந்த மாவட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி வென்றதன் பின்னணியில் இருந்த பிரியங்கா காந்தியின் பக்காவான‛ஸ்கெட்ச்' குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Karnataka Election: How Priyanka Gandhi campaign worked, to BJP General Secretary CT Ravi lost, in Chikkamagalur

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியை பிடிக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடத்தை விட கூடுதல் தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சி மொத்தம் 135 தொகுதிகளில் வென்றது. பாஜக கடந்த முறை 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை வெறும் 66 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தல் தோல்வியால் தென்மாநிலங்களில் இருந்து பாஜக முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்து இருப்பது அந்த கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடைய தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் சத்தமின்றி காங்கிரஸ் பல சாதனைகளை செய்துள்ளது. அதாவது ஜேடிஎஸ், பாஜகவின் கோட்டைகளில் கூட காங்கிரஸ் இந்த முறை கூடுதல் தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஜேடிஎஸ்ஸின் கோட்டையான ஓல்டு மைசூர் பகுதியில் 58 தொகுதிகளில் 37 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அதேபோல் மத்திய, மும்பை-கர்நாடகா மாவட்டங்கள் தான் பாஜக செல்வாக்காக திகழ்கிறது. இங்கு பாஜகவை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். மேலும் 11 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சிக்கமகளூர் மாவட்டத்தை பாஜகவிடம் இருந்து முழுமையாக காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. இது பாஜகவுக்கு பலம்வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றாகும். மாவட்டத்தில் சிக்கமகளூரு, தரிகெரே, மூடிகெரே, சிருங்கேரி, கடூர் என மொத்தம் 5 தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சிக்கமகளூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சிடி ரவி தோல்வியடைந்துள்ளது.

இந்த தொகுதியில் சிடி பாஜக சார்பில் போட்டியிட்ட சிடி ரவி 79,128 ஓட்டுகள் பெற்ற நிலையில் காங்கிரஸஅ வேட்பாளர் தம்மையா 85,054 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். அவர் சிடி ரவியை 5,926 ஒட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சிடி ரவி கடந்த 2004, 2008, 2013, 2018 ஆகிய 4 தேர்தல்களில் தொடர்ந்து சிக்கமகளூர் தொகுதியில் வெற்றி பெற்று வந்த நிலையில் இப்போது தோல்வியடைந்துள்ளார். மேலும் சிடி ரவியை வீழ்த்திய தம்மையா வேறு யாரும் இல்லை. அதாவது தம்மையா, சிடி ரவியிடம் 14 ஆண்டுகாலம் நெருக்கமாக அதாவது ‛ரைட்ஹேண்டாக' இருந்தவர் தான்.

இது ஒருபுறம் இருக்க சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள சிக்கமகளூர், கடூர், மூடிகெரே, சிருங்கேரி, தரிக்கெரே உள்ளிட்ட 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றதன் பின்னணியில் பிரியங்கா காந்திக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அவரது பிரசாரம் தான் மக்களை காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்க வைத்துள்ளது. அதாவது கடந்த மாதம் 26ம் தேதி பிரியங்கா காந்தி சிக்கமகளூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது மிகவும் உருக்கமாக இருந்தது. பிரியங்கா காந்தியின் பாட்டியான இந்திரா காந்திக்கு மறுவாழ்வு கொடுத்த தொகுதி இதுதான். எங்களையும் இந்த மக்கள் கைவிடமாட்டார்கள். நான் இந்திரா காந்தியின் பேத்தி என கூறியது மக்களின் மனதை மாற்றி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதாவது இந்தியாவில் எமர்ஜென்சியை அறிவித்ததால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி மீது மக்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதனால் எமர்ஜென்சிக்கு பிறகு 1977ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்த பிரதேசம் ரேபரேலியில் போட்டியிட்டு இந்திரா காந்தி தோற்றார். அதோடு காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் தோல்வியடைந்தது. இதனால் இந்திரா காந்தியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதையடுத்து 1978ல் கர்நாடகா மாநிலம் சிக்கமகளூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட்டு சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் அரசியலில் மறுவாழ்வு பெற்றதோடு அதன்பிறகு 1980ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா காந்தி பிரதமரானார். இத்தகைய வரலாறு கொண்ட சிக்கமகளூரில் தான் அவரது பேத்தி பிரியங்கா காந்தி உருக்கமாக பேசினார்.

அப்போது பிரியங்கா காந்தி, ‛‛சிக்கமகளூர் என்பது என் பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு அளித்த தொகுதியாகும். இங்குள்ள ரம்பாபுரி மற்றும் சாரதாம்மன் கோவில்களுக்கு எனது தந்தை ராஜீவ்காந்தி வந்து சென்றுள்ளார். எனது அண்ணன் ராகுல்காந்தியும் இங்கு வந்துள்ளார். எனது பாட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த இந்த மண்ணில் என்னுடைய அண்ணன் ராகுல்காந்திக்கும் நல்லது நடக்க வேண்டும். நான் இந்திரா காந்தியின் பேத்தி. 1978ல் பாட்டி இந்திரா காந்தி பிரசாரம் செய்தபோது மழை பெய்தது. இப்போது நான் பேசும்போதும் மழை பெய்கிறது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த மண்ணை மறக்காமல் இருக்கிறோம்.

அன்று இந்திரா காந்தி பேசிய அதே இடத்தில் மேடை அமைத்து, மழை பெய்யும் சூழ்நிலையில் உங்கள் முன் நின்று நான் பேசுகிறேன். இது எனக்கு ஒரு உணர்வுப்பூர்வமான நெகிழ்வான தருணம். நான் பேசும்போது மழை வருகிறது. இது கடவுளின் ஆசீர்வாதம். முன்பு என் பாட்டி இந்திரா காந்தியை நாடாளுமன்றத்தை விட்டு துரத்தினர். அவரது பதவி ரத்து செய்யப்பட்டது. எனது அண்ணனுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. 2 பேரின் மீதும் பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எங்கள் குடும்பம் தற்போது பிரச்சனையில் தடுமாறுகிறது. அதேபோல் உங்களின் குடும்பமும் பிரச்சனையில் உள்ளது. இதனால் மீண்டும் எனது அண்ணனும், நீங்களும் வெற்றி பெற வேண்டும். இதனால் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும்'' என உருக்கமாக கூறியிருந்தார்.

மேலும் சிருங்கேரி மடத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதேபோல் ராகுல் காந்தியும் சிக்கமகளூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அவரும் பாட்டி இந்திராகாந்திக்கும், சிக்கமகளூரு மக்களுக்கும் உள்ள அன்பு, பாசத்தை பற்றி உருக்கமாக பேசினார். இந்த நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சிக்கமகளூரு, தரிகெரே, மூடிகெரே, சிருங்கேரி, கடூர் உள்ளிட்ட 5 தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+