சாவர்க்கரா.. திப்பு சுல்தானா? கர்நாடக தேர்தலில் யார் என்று பார்த்துடுவோம் -பாஜக எம்பி சர்ச்சை பேச்சு
கர்நாடக தேர்தல் சாவர்க்கர் - திப்பு சுல்தான் இடையிலான போட்டி என பாஜக எம்பி நளின் குமார் கட்டீல் பேசியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், இதில் சாவர்க்கர் வேண்டுமா? திப்பு சுல்தான் வேண்டுமா என்று விவாதிப்போம் என பாஜக எம்பி நளின் குமார் கட்டீல் பேசி அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சவால் விடுத்து இருக்கிறார்.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. இதற்கு முன்பாகவே அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.
பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆளும் பாஜகவும் பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து உள்ளன.

தேர்தல் வியூகம்
குறிப்பாக ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் தொகுதி வாரியாக கர்நாடக மாநில எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகளை வைத்து பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் கூட்டங்களை நடத்தி, மீண்டும் தாமரைக்கே வாக்களிக்குமாறு மக்களிடம் பரப்புரை செய்து வருகிறது.

பாஜக எம்பி நளின் குமார்
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பற்ற பாஜக தலைவரும் எம்பியுமான நளின் குமார் பாஜக கூட்டம் ஒன்றில் திப்பு சுல்தான் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தினமும் மதம் சார்ந்து சர்ச்சையான கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் அவரின் தற்போதைய பேச்சு அம்மாநில அரசியலில் விவாத பொருளாக மாறி உள்ளது.

திப்பு சுல்தான் VS சாவர்க்கர்
கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "திப்பு சுல்தானுக்கு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு காங்கிரஸ் கட்சியினர் அனுமதி வழங்குகிறார்கள். நமது மாநிலத்திற்கு தேவையில்லாத ஒன்று இது. இந்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் போட்டி காங்கிரஸ் VS பாரதிய ஜனதா கட்சிகள் மத்தியில் அல்ல.

சித்தராமையாவுக்கு சவால்
திப்பு சுல்தான் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தங்களுக்கு மத்தியில்தான் தேர்தல் நடைபெறுகிறது. சித்தராமையாவிற்கு நான் சவால் விடுகிறேன். வரும் தேர்தலில் போட்டி சாவர்க்கருக்கும் திப்பு சுல்தானுக்கும்தான். நம் நாட்டிற்கு தேவை தேச பக்தர் சாவர்க்கரா அல்லது திப்பு சுல்தானா? என்பது பற்றி விவாதிக்கலாம் வாருங்கள்." என்று சவால் விடுத்தார்.

லவ் ஜிஹாத் சர்ச்சை
நளின் குமாரின் இந்த கருத்து விவாதப் பொருளாக கர்நாடக அரசியலில் மாறி இருக்கிறது. இவர் கடந்த மாதம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தொண்டர்களிடம், "பொது பிரச்சனைகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம். லவ் ஜிஹாத் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறினார்.

சூடுபிடித்த தேர்தல் களம்
இதனால் சிறுபான்மையினருக்கு எதிராக மத வெறுப்பை தூண்டும் வகையில் நளின் குமார் பேசி வருவதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில், திப்பு சுல்தான் - சாவர்க்கர் குறித்த கருத்தால் அவருக்கு மேலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்னும் இரண்டரை மாதங்களில் தேர்தல் நடைபெறும் சூழலில் அரசியல் தலைவர்களின் அடுத்தடுத்த சர்ச்சை பேச்சுக்களால் இப்போது அம்மாநிலத்தில் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications