3 மணிநேரம்.. 26 கிமீ.. பெங்களூர் பேரணியில் அசராத பிரதமர் மோடி! பிரமித்த மக்கள்!அரண்ட காங்கிரஸ்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்த பிரசார வாகனத்தில் பெங்களூரில் 26 கிலோமீட்டருக்கு 3 மணிநேரம் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். வழிநெடுகிலும் கூடியிருந்த திரளான தொண்டர்கள் ‛மோடி.. மோடி..' கோஷத்துடன் மலர்தூவி அவரை வரவேற்றது பாஜகவினரை உற்சாகப்படுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அரண்டுபோய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முதல் நாளை வரை 3 நாள் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் முகாமிட்டு வாக்கு சேகரிக்கிறார்.

இன்று 2வது நாள் பிரசாரத்தை பிரதமர் மோடி பெங்களூரில் துவங்கினார். பெங்களூரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் இன்றும், நாளையும் பிரதமர் மோடி பேரணியாக செல்வதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை பாஜக கட்சியினர் செய்தனர்.
அதன்படி இன்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் பிரமாண்ட ஊர்வலத்தை தொடங்கினார். பெங்களூர் ஆர்பிஐ மைதானத்தில் இருந்து பிரதமர் மோடியின் பிரமாண்ட பேரணி தொடங்கியது. காவி நிறத்திலான பிரசார கார் பிரதமர் மோடிக்காக வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த காரில் பிரதமர் மோடி ஏறி நின்று ஊர்வலமாக சென்றார்.
அப்போது சாலையின் இருபுறமும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று ‛மோடி.. மோடி..' என கோஷமிட்டனர். மேலும் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் அவர் மீது பூக்கள் தூவப்பட்டன. இதனால் பிரதமர் மோடி உற்சாகமடைந்தார். இந்த பேரணி காலை 10 மணிக்கு துவங்கிய நிலையில் தொடர்ந்து மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி அசராமல் திறந்த வாகனத்தில் நின்றபடி பேரணியாக சென்றார்.
பிரதமர் மோடியின் இந்த பேரணியையொட்டி மொத்தம் 35 ரோடுகளில் பயணிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் அடுத்ததாக பெங்களூரில் பிரதமர் மோடி விடுபட்ட பகுதிகளில் 2 நாள் பேரணி நடத்த உள்ளார். இன்று மொத்தம் 26 கிலோமீட்டர் பிரதமர் மோடி பேரணி சென்ற நிலையில் நாளை 10 கிலோமீட்டருக்கு பெங்களூரில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக செல்ல உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேரணியால் காங்கிரஸ் கட்சி அரண்டு போய் உள்ளது. ஏனென்றால் கடந்த 2018 தேர்தலின்போது முதலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழல் தான் கர்நாடகாவில் நிலவியது. மேலும் 2013-2018 வரையிலான காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு மீது பெரிய அளவில் எந்த புகாரும் இல்லாத நிலையில் இருந்தது.
ஆனால் இறுதிக்கட்டத்தில் பிரதமர் மோடியின் பிரசாரம் பாஜகவுக்கு கைக்கொடுத்து காங்கிரஸ் கட்சியை வீழ்ச்சியடைய செய்தது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி அந்த யுக்தியை கையில் எடுத்துள்ளார். இதனால் தான் காங்கிரஸ் கட்சி கலக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!












Click it and Unblock the Notifications