அடேங்கப்பா! 115% உயர்ந்த பாஜக அமைச்சர் அசோக்கின் சொத்து மதிப்பு.. யாரை எதிர்த்து போட்டி தெரியுமா?
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசின் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் அசோக்கின் சொத்து மதிப்பு 115 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரது பொறுப்புகள் 2.49 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.9.56 கோடியாக அதிகரித்துள்ளது.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 113- இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.
மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் தீவிரம் அடைந்துள்ளது.

பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்பட அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில், கர்நாடகாவில் செல்வாக்கு மிக்க பாஜக தலைவர்களில் ஒருவராக விளங்கும் அசோக்கின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.
அசோக்கின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் மட்டும் 115 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. அசோக்கிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.3.73 கோடி அசையும் சொத்துக்கள் இருப்பதாக கூறியிருந்தார். ஆனால், தற்போது அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு 12.31 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் அவரது மனைவி வாங்கிய 12 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளும் அடங்கும்.
அசோக்கின் பொறுப்புகளும் 282 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரது பொறுப்புகள் 2.49 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.9.56 கோடியாக அதிகரித்துள்ளது. அசோக் குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.87.35 கோடியாகும். 2018 ஆம் ஆண்டு ரூ.40.62 கோடியாக இருந்தது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் அசோக் பத்மநாபநகர் தொகுதியில் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது 4-வது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இது தவிர கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாருக்கு எதிராகவும் கனகபுரா வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications