கர்நாடகா தேர்தல்.. அடித்து ஆட தயாராகும் ஓவைசி.. "பக்கா பிளான்".. கூட்டணிக்கு தயார் எனவும் அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், ஐதராபாத் எம்.பியும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான ஓவைசி, தனது கட்சி கர்நாடக தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அவர் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

கர்நாடக சட்டசபை தேர்தல்
கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 113 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும். கர்நாடகாவில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவிடம் இருக்கும் தென்மாநிலம் கர்நாடகா மட்டும் தான். இதனால், கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா பலவிதமான வியூகங்களை வகுத்து வருகிறது. மறுபக்கம் காங்கிரஸ் கட்சி இழந்த ஆட்சியை பிடித்து மீண்டும் கர்நாடகாவில் ஆட்சி அரியணையில் அமர தீவிர தேர்தல் பிராசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

வேட்பாளர்கள் பட்டியல்
அதுபோக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியும் கிங்மேக்கராக மாறும் முனைப்புடன் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இதனால் கர்நாடக தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலைக் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஏற்கனவே அறிவிக்கத் தொடங்கிவிட்டன. பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. விரைவில் தேர்தல் பட்டியல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவைசியின் கட்சியும் போட்டி
இந்த நிலையில், ஐதராபாத் எம்.பியும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான ஓவைசி, தனது கட்சி கர்நாடக தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஓவைசி கூறுகையில், "தற்போது வரை நாங்கள் 3 தொகுதிகளுக்கன வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். கூட்டணிக்கு நாங்கள் தயாராக உள்ளோம். உறுதியாக தேர்தலில் போட்டியிடுவோம்.

கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்
கூட்டணியா அல்லது தனித்து போட்டியிடுவோமா என்பதற்கு கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்" என்றார். ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஒவைசி கட்சி முனைப்பு காட்டி வருகிறது. எனினும், இது குறித்து ஜேடிஎஸ் கட்சி இன்னும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. கடந்த 2018- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜேடிஎஸ் கட்சிக்கு ஓவைசியின் ஏஐ.எம்.ஐ.எம் கட்சி ஆதரவு அளித்தது. எனினும், தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

பாஜகவின் பி டீம் என விமர்சனம்
பாஜகவுக்கு எதிரான இஸ்லாமிய வாக்குகளை பிரித்து அக்கட்சி வெற்றி பெற மறைமுகமாக உதவுவதாக ஓவைசி மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இருந்தாலும் இதைப்பற்றியெல்லாம் கண்டு கொள்ளாத ஓவைசி மேற்கு வங்காளம், குஜராத் போன்ற மாநில சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார். தற்போது கர்நாடகாவிலும் 25 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த போவதாக ஓவைசி அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications