Zee News Exit poll: கர்நாடகாவில் வொர்க் அவுட்டாகிறதா ராகுல் மேஜிக்? சித்தராமையா முதல்வராகிறாரா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைக்கும் என ஜி நியூஸ் மேட்ரிஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்றைய தினம் நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் 65.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளனர்.

மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. இத்தனை இடங்களை எந்த கட்சி பெறுகிறதோ அந்த கட்சி பெரும்பான்மை பெற்றது என்று அர்த்தம். அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு எந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.
இந்த நிலையில் பாஜக மற்ற கட்சிகளை வளைத்து கூட்டணி ஆட்சி அமைத்துவிடும் என்பதால் காங்கிரஸ் கட்சி ஜேடிஎஸ்ஸை விட அதிக இடங்களில் வென்றாலும் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது. ஆனால் அவருடைய ஆட்சியில் ஓராண்டுக்கு பிறகு காங்கிரஸ் , ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்ததால் குமாரசாமி பெரும்பான்மையை இழந்தார்.
Recommended Video
இதையடுத்து கர்நாடகா சட்டசபையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் தோல்வியுற்றார். பிறகு பாஜக ஆட்சி அமைக்க கோரியது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார். இதையடுத்து அவரது தலைமையின் கீழ் ஆட்சி தொடர்ந்தது. ஆனால் பாஜகவில் 70 வயதுக்கு மேல் இருப்போர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற ஒரு விதி இருப்பதால் எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து பசவராஜ் பொம்மை தலைமையில் ஆட்சி அமைந்தது. இன்று நடந்த தேர்தலில் பாஜக, காஙகிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சியிடையே போட்டி இருந்தது. பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ள போராடியது. 38 ஆண்டுகளாக கர்நாடகாவில் எந்த கட்சியும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதில்லை. அதை முறியடித்து பாஜக போராடியது. அது போல் இந்த முறை எப்படியாவது பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என காங்கிரஸ் தீவிரம்காட்டியது.

இதனிடையே நான் கிங் மேக்கர் இல்லை, கிங் என ஜேடிஎஸ்ஸின் குமாரசாமி கூறி வந்தார். தற்போது தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் ஜி நியூஸ் மேட்ரீஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 103 முதல் 118 இடங்கள் வரை வெல்லும். பாஜக 79 முதல் 94 இடங்கள் வரை வெல்லும். அது போல் ஜேடிஎஸ் 25 முதல் 33 இடங்கள் வரை வெல்லும் என கணித்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பின் படி கர்நாடகா சட்டசபையில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி ஜேடிஎஸ்ஸுடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுத்துவிடும். ஒரு வேளை காங்கிரஸ் கட்சி 113 இடங்களை வென்றால் தனித்து ஆட்சி அமைக்கும். வாக்கு பதிவு வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் எந்த கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்பதை பார்ப்போம்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications