ஆண்தான்.. காலில் விழுந்து கதற கதற 'வெறித்தனமாக' 'வேட்டையாடிய' சூரஜ் ரேவண்ணா. பகீர் எப்.ஐ.ஆர்!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன்களில் ஒருவரான சூரஜ் ரேவண்ணா, ஆண் ஜேடிஎஸ் தொண்டரை எப்படி எல்லாம் கதற கதற ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தினார் என திடுக்கிடும் தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆண் என்றும் பேராமல் மூர்க்கத்தனமாக ஜேடிஎஸ் தொண்டரை சூரஜ் ரேவண்ணா 'வேட்டையாடியதை' விவரிக்கிறதாம் எப்.ஐ.ஆர்.
ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா, 300 பெண்களை நாசமாக்கினார் ; 3000 ஆபாச வீடியோக்களை எடுத்தார்; தாய், மகள் இருவரையும் விட்டுவிடாமல் வேட்டையாடினார் என்பது கர்நாடகாவில் போனமாதம் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி. பிரஜ்வல் ரேவண்ணா மீது அடுத்தடுத்து பெண்கள் புகார் கொடுத்தனர். அப்போது பிரஜ்வல் வெளிநாட்டில் பதுங்கி இருந்தார்.

பிரஜ்வல் மீது புகார் கொடுத்த பெண்களை கடத்திச் சென்று சித்ரவதை செய்தார் தந்தை ரேவண்ணா என்பதும் அடுத்த வழக்கு. இதில் முன்னாள் அமைச்சர் ரேவண்ணா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் ரேவண்ணா மனைவி- பிரஜ்வல் தாயார் பவானியும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரஜ்வல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதர் சூரஜ் ரேவண்ணா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வல் வேட்டையாடியது பெண்களை.. பிரஜ்வல் சகோதரர் சூரஜ் ரேவண்ணா வேட்டையாடியதோ ஜேடிஎஸ் கட்சியின் ஆண் தொண்டர் சேத்தன் என்பவரை.
சூரஜ் ரேவண்ணா, ஆண் ஜேடிஎஸ் தொண்டரை எப்படி எல்லாம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட மிரட்டினார் என விவரிக்கிறது கர்நாடகா போலீசாரின் முதல் தகவல் அறிக்கை. அதில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் சில தகவல்கள் மட்டும்..
ஜூன் 16.. பிற்பகல் 2 மணி.. ஜேடிஎஸ் தொண்டர் சேத்தனுக்கு போனடித்தார் சூரஜ் ரேவண்ணா. மாலை 6 மணி முதல் 6.15-க்குள் தம்மை சந்திக்க வருமாறு அழைத்தார் சூரஜ்.
ஹாசன் மாவட்டத்தில் ஞான்னிகடா என்ற இடத்தில் உள்ள சூரஜ் ரேவண்ணாவின் பண்ணைவீட்டுக்குதான் சேத்தனை அழைத்திருக்கிறார். பண்ணை வீட்டுக்குள் சேத்தன் நுழைந்ததும் கதவை மூடுமாறு சூரஜ் கூறியிருக்கிறார். கதவுகள் மூடப்பட்ட பின் சேத்தனின் தோள்பட்டையை அரவணைத்தபடி காதுகளை சீண்டியபடி முத்தமிட்டிருக்கிறார் சூரஜ். இதனை தடுக்க சேத்தன் முயற்சிக்க அப்போது அவரது உதடுகளை கடித்து முத்தமிட்டிருக்கிறார் சூரஜ். அந்த வெறித்தனத்திலும் என்னுடன் ஒத்துழைத்தால் நல்ல வேலைவாங்கித் தருகிறேன் என காரியத்தில் கண்ணாக இருந்திருக்கிறார் சூரஜ்.
ஆனாலும் சேத்தன், சூரஜ்ஜின் இந்த சேட்டைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சேத்தன் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க, நான் யார் தெரியுமில்ல.. என் பேமிலி பற்றி தெரியும்ல என கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
அத்துடன் சேத்தனை படுக்கையில் கீழே தள்ளி.. ஒரு பெண்ணிடம் எப்படி எல்லாம் மூர்க்கமாக நடந்து கொள்ள முடியுமோ அப்படி "வேட்டையாடி" இருக்கிறார் சூரஜ். ஒரு கட்டத்தில் சூரஜ் ரேவண்ணாவின் 'பலாத்கார'த்தை தாங்கவே முடியாமல் சேத்தன் காலில் விழுந்து கதறி கதறி அழுதிருக்கிறார். சூரஜ் விடுவதாக இல்லை என 'ஆக்ரோஷமாக' ஆடி முடித்திருக்கிறார். அரசியலில் உன்னை பெரிய ஆளாக்குவேன்; நல்ல வேலை வாங்கித் தருவேன் என்றெல்லாம் ஆசைவார்த்தை காட்டியபடியே 'ஆசை' அனைத்தையும் நிறைவேற்றியதுடன் வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியும் இருக்கிறார்.
இதன்பின்னர் தாம் பாதிக்கப்பட்டது குறித்து சூரஜ் ரேவண்ணாவின் உதவியாளர் சிவக்குமாரிடம் அழுது புலம்பி இருக்கிறார் சேத்தன். அப்போதுதான் ரூ2 கோடி பணம் தருகிறோம்; யாரிடம் எதுவும் பேசாமல் அமைதியாக போய்விடு; இல்லை எனில் கொன்று விடுவோம் என சூரஜ் தரப்பு மிரட்டியதாம். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications