டென்சன் ஃப்ரீ! உலகம் சுற்றும் வாலிபனாக ரிலாக்ஸ் மோடில் ”எடியூரப்பா..” போட்டி “அவர்” கூடதானாம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று ஓய்வு நேரத்தை கழித்து வருகிறார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களிலேயே எடியூரப்பா மீது மாநில பாஜகவினர், அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தனர்.

அரசியலில் ஒதுங்கிய எடியூரப்பா

அரசியலில் ஒதுங்கிய எடியூரப்பா

எடியூரப்பாவுக்கு வயதும் அதிகமாகிவிட்டதால் அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விலகினார். அவரை தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன் கட்சி மற்றும் அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் ஒதுங்கியே இருக்கிறார் எடியூரப்பா.

10 மாதத்தில் 4 நாடுகள்

10 மாதத்தில் 4 நாடுகள்

தனது ஓய்வு நேரத்தை குடும்பத்துடனும், பிடித்தமான விசயங்களை செய்வதிலும் கழிப்பதுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார் எடியூரப்பா. கடந்த 10 மாதங்களில் மட்டும் 4 நாடுகளுக்கு அவர் சுற்றுலா சென்றிருக்கிறார். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிடுவோம் என்ற முடிவில் இருக்கிறாராம் அவர்.

ஐரோப்பிய சுற்றுலா

ஐரோப்பிய சுற்றுலா

தற்போது கூட குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலாவில்தான் எடியூரப்பா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு வந்துவிட்டு டெல்லி புறப்பட்டவுடன் தனது குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டார் அவர். தனது மகன் பி.ஒய். எடியூரப்பா, மகள்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் சென்றுள்ள அவர் ஜூலை 1 ஆம் தேதி நாடு திரும்புகிறார்.

உலகம் சுற்றும் வாலிபன்

உலகம் சுற்றும் வாலிபன்

தற்போது பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அவருக்கு லண்டனில் உள்ள பசவேஸ்வரா சிலையை பார்க்க வேண்டும் என்பது விருப்பமாம். அதன் பேரிலேயே அவர் அங்கு சென்றிருக்கிறார். கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மாலத்தீவுக்கு சென்ற அவர், அதே ஆண்டு டிசம்பர் மாதம் துபாய்க்கும், இந்த ஆண்டு மே மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுற்றுலாவுக்காக கர்நாடக மாநில பாஜக செயற்குழுவில் கூட எடியூரப்பா கலந்துகொள்ளவில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+