நினைவெல்லாம் சங்கீதா.. பின்னாலயே விரட்டி விரட்டி வந்த நிழல்.. அதுக்குன்னு இப்படியா? கலங்கிய கர்நாடகா
பெங்களூர்: சங்கீதா எங்கே போனாலும், பின்னாடியே இவரும் கிளம்பி போயிடுவாராம்.. அந்த அளவுக்கு ஒருதலைக்காதல் மோகம் தலைக்கேறி விட்டது. என்ன நடந்தது கர்நாடகாவில்?
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகாவில் உள்ளது நிடுகுடு என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த பெண் சங்கீதா.. 21 வயதாகிறது.. பி.காம் படித்திருக்கிறார்.. அதற்கு பிறகு மேற்படிப்பு எதுவும் படிக்கவ்லலை.. வீட்டில்தான் இருந்துள்ளார் சங்கீதா.

தலைக்கேறிய காதல்: இதே கிராமத்தை சேர்ந்தவர் சிவா.. சங்கீதாவை நீண்ட காலமாகவே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.. முதன்முதலில் தன்னுடைய காதலை, சங்கீதாவிடம் சொன்னபோதே, அதை சங்கீதா ஏற்கவில்லை.. மறுப்பு சொல்லிவிட்டார்.
ஆனாலும், சிவா கேட்கவில்லை.. சங்கீதா மீது உயிரையே வைத்திருந்ததால், அவர் எங்கே போனாலும், பின்னாடியே ஃபாலோ செய்து கொண்டு போவாராம்.. பிறகு, தன்னை தயவுசெய்து காதலிக்கும்படி தொந்தரவும் செய்வாராம். தன்னால் காதலிக்க முடியாது என்று பலமுறை சங்கீதா சொல்லியும், கேட்கவில்லை.. காதல் டார்ச்சரை தொடர்ந்து கல்யாண டார்ச்சரை ஆரம்பித்துள்ளார் சிவா.. தன்னை மட்டமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தொல்லை செய்து வந்திருக்கிறார்.
டார்ச்சர்: இப்படிப்பட்ட சூழலில்தான், பேலூரில் உள்ள அய்யப்பஸ்வா கோயிலுக்கு சங்கீதா குடும்பத்துடன் சென்றிருந்தார்.. வழக்கம்போல் சிவாவும், அதே கோயிலுக்கு கிளம்பினார்.. வழக்கம்போல, சங்கீதாவிடம் சென்று டார்ச்சரை ஆரம்பித்தார்..
"எதுக்காக நான் போன் செய்தால், போனை எடுக்க மாட்டேங்குறே" என்று சரமாரியாக திட்ட ஆரம்பித்தார்.. "என்னை நீ லவ் பண்ணாவிட்டால், கொலையே செய்துடுவேன்" என்றும் சங்கீதாவை மிரட்டியிருக்கிறார். நாளுக்கு நாள் சிவாவின் டார்ச்சரால் நொந்துபோயிருந்த சங்கீதா, நேற்று கோயிலுக்கும் வந்து கொலை மிரட்டல் விடுக்கவும், மிகவும் கவலையடைந்தார்.. மிகுந்த மன உளைச்சலும் அடைந்தார்.
அலறிய பெற்றோர்: ஒருவேளை, தன்னால் தன்னுடைய குடும்பத்திற்கும் கெட்டப்பெயர் வந்து விடுமோ என்று பயந்தே போனார்.. நேற்றைய தினம், வீட்டில் யாருமில்லாததால், தற்கொலை செய்து கொண்டார் சங்கீதா.. சங்கீதாவின் பெற்றோர் கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தபோது, மகளின் சடலம் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறினார்கள்..
தகவலறிந்து வந்த பேலூர் போலீசார் சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு, வழக்குப்பதிவு செய்து டார்ச்சர் சிவாவையும் கைது செய்தனர்.
"உங்கள் மகளை எனக்கே திருமணம் செய்து வைத்துவிடுங்கள்" என்று சங்கீதாவின் பெற்றோரிடமே நேரடியாகவே பெண் கேட்டு சென்றாராம் சிவா. ஆனால், வெறும் 21 வயதுதான் தற்போது நடப்பதால், மகளுக்கு கல்யாணம் செய்து வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்..
அவமானம்: அதற்கு பிறகும் சங்கீதாவை விடாமல் விரட்டியிருக்கிறார் சிவா. பொது இடங்கள் என்றும் பார்க்காமல், பின்னாடியே வந்து டார்ச்சர் தந்ததால், அவமானம் தாங்காமல் பல நாட்கள் கதறி அழுதாராம் சங்கீதா.. இறுதியில் மொத்தமாக தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.. அளவுக்கு மீறினால், அன்புகூட ஆபத்துதான் போலும்..!!
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications