"100 வீடு எங்க பொறுப்பு பினராயி சேட்டா".. கேரளாவுக்கு உதவும் கர்நாடகா அரசு.. சித்தராமையா அறிவிப்பு
பெங்களூர்: கவலைப்படாதீங்க சேட்டா.. நாங்கள் இருக்கிறோம் என்று நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கர்நாடகா அரசு தோள் கொடுப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100 வீடுகள் கர்நாடகா அரசு சார்பில் கட்டி தரப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்ரதாமையா, கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு உறுதியளித்துள்ளார்.
‛கடவுளின் தேசம்’ என அழைக்கப்படும் கேரளா தற்போது பெரும் துயரில் உள்ளது. அங்குள்ள வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்கள் நிலச்சரிவால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

அதிக கனமழை பெய்த நிலையில் மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள், மண் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டு வீடுகள் மீது விழுந்தன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்கள் உருக்குலைந்து போயின. வீடுகள் சேதமடைந்த நிலையில் மக்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் பொதுமக்கள் மண்ணுக்கடியில் புதைந்தனர்.
1000க்கும் அதிகமானவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் 350க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இன்னும் 180க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை.
தெர்மல் ஸ்கேனர் முயற்சி தோல்வி! 220 பேரின் நிலை என்ன? வயநாடு நிலச்சரிவில் 344யை தொட்ட பலி.. சோகம்
கேரளா வரலாற்றில் இப்படியொரு நிலச்சரிவு என்பது ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதோடு இந்த நிலச்சரிவை தேசிய பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு இன்னும் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. இத்தகயை சூழலில் தான் தங்களின் உறவுகளை இழந்து நிவாரண முகாம்களில் உள்ளவர்கள் அழுது புலம்பி வருகின்றனர். உறவினர்களை இழந்த துக்கம் ஒரு பக்கம் என்றால், வீடு, நிலம் என அனைத்தையும் இழந்து கையறு நிலையில் உள்ளதாகவும், எதிர்காலத்துக்கான வாழ்வாதாரம் தொடர்பான அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தான் தற்போது நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றன.அந்த வகையில் கேரளாவின் அண்டை மாநிலமாக அங்கம் வகிக்கும் கர்நாடகா தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கர்நாடகா அரசு சார்பில் 100 வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
நிலச்சரிவு ஸ்பாட்டில் மோகன்லால்.. திடுதிப்புனு ராணுவ உடையில் வந்தது ஏன்? பின்னணியில் மிலிட்டரி பதவி
இதுதொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில்,ல ‛‛வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் கேரளாவுக்கு ஆதரவாக கர்நாடகா அரசு நிற்கிறது. கர்நாடகா அரசு சார்பில் 100 வீடுகள் கட்டி தரப்படும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளேன். ஒன்றாக இணைந்து நம்பிக்கையை கட்டியெழுப்பி மீட்டெடுப்போம்’’ என தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி நேற்று முன்தினம் தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் வயநாடு சென்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதன்பிறகு நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, வயநாாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 100 வீடுகளை காங்கிரஸ் கட்சி கட்டி கொடுக்கும் என்று அறிவித்தார். ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது கர்நாடகா அரசு சார்பில் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான சித்தராமையாகவும் 100 வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications