நிலச்சரிவு ஸ்பாட்டில் மோகன்லால்.. திடுதிப்புனு ராணுவ உடையில் வந்தது ஏன்? பின்னணியில் மிலிட்டரி பதவி
சென்னை: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350க்கும் அதிகமானவர்கள் சிக்கி பலியாகி உள்ளனர். இன்னும் 180க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். இந்நிலையில் தான் நடிகர் மோகன் லால் இன்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். அப்போது அவர் ராணுவ உடையில் சென்றது கவனம் பெற்ற நிலையில் அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் தான் கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழை பெய்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள், மண் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன.மலைகளில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு என்பது முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்களை மொத்தம் அழித்தது. மேலும் அதனையொட்டி பிற இடங்களும் பாதிப்பை எதிர்கொண்டது.
சாலியார் என்ற ஆற்றின் கரையோரங்களில் வசித்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் இந்த ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். வீடுகளும் மண்சரிவில் தரைமட்டமானது. நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் 1000க்கும் அதிகமானவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தாங்க முடியாத சோகம்.. கண்ணீருடன் கும்பிட்டு நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்ட வீடியோ.. உருக்கம்
இதில் ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் பலி எண்ணிக்கை என்பது 350ஐ கடந்துள்ளது. இன்று மதியம் 2 மணி நிலவரப்படி பலி எண்ணிக்கை 355ஐ தொட்டுள்ளது. மேலும் 180க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன? என்பது யாருக்கும் தெரியவில்லை. அவர்களை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று நடிகர் மோகன் லால் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். புச்சரிமடம் பகுதியில் அவர் சென்று அங்கு மீட்பு பணியில் இருந்த ராணுவத்தினரிடம் விபரங்களை கேட்டறிந்தார். இந்த வேளையில் மோகன் லால் ராணுவ உடையில் சென்றார். நம் நாட்டை பொறுத்தவரை ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் மட்டுமே ராணுவ உடையணிய முடியும். மற்றவர்கள் அணிய அனுமதியில்லை.
இத்தகைய சூழலில் தான் பலருக்கும் மோகன்லால் எப்படி ராணுவ உடை அணிந்து நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார்? என்ற கேள்வி எழுந்துள்ளன. இதன் பின்னணியை பார்த்தால் சுவாரசிய தகவல் ஒன்று உள்ளது. அதாவது நம் நாட்டில் ஒவ்வொரு துறையிலும் முன்னணியில் உள்ளவர்களுக்கு இந்திய முப்படைகளில் கவுரவ பதவிகள் என்பது வழங்கப்படும்.
அந்த வகையில் மோகன் லாலுக்கு இந்திய ராணுவம் மீது தீராக்காதல் உள்ளது. இதனை அவர் தனது திரைப்படங்களிலும், பொதுமேடைகளிலும் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்ற விரும்பிய அவர் பாதை மாறி நடிகரானார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த மோகன் லால் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராகவும் புகழ் பெற்றார். நடிகராக இருந்தாலும் கூட அவர் ராணுவம் சார்ந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இளைஞர்களை ஊக்கப்படுத்தினார்.
தெர்மல் ஸ்கேனர் முயற்சி தோல்வி! 220 பேரின் நிலை என்ன? வயநாடு நிலச்சரிவில் 344யை தொட்ட பலி.. சோகம்
குறிப்பாக கூற வேண்டும் என்றால் ‛கீர்த்திசக்ரா, குருசேத்ரா, காந்தஹார் உள்ளிட்ட திரைப்படங்களில் ராணுவ காதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார். இதன்மூலம் ராணுவத்தில் சேர முடியாமல் போன தனது ஆசையை மோகன் லால் தீர்த்து கொண்டார். மேலும் 2009ம் ஆண்டில் நடிகர் மோகன் லால் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட இந்திய ராணுவம் திரைப்படங்கள் மூலம் இளைஞர்களை ராணுவத்துக்கு சேவையாற்ற தூண்டியதை பாராட்டி மோகன் லாலுக்கு Indian Territorial Armyயின் கவுரவ பதவியாக லெப்டினன்ட் கர்னல் பொறுப்பை வழங்கியது. இதன்மூலம் நம் நாட்டில் முதல் முறையாக இந்திய ராணுவத்தின் கவுரவ பதவியை பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை மோகன் லால் பெற்றார்.












Click it and Unblock the Notifications