தாங்க முடியாத சோகம்.. கண்ணீருடன் கும்பிட்டு நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்ட வீடியோ.. உருக்கம்
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் திடீரென்று கண்கலங்கி கையெடுத்து கும்பிட்டு உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு வேலூர் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் தான் மன்சூர் அலிகான் தற்போது கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் உருக்கமாக பேசும் நிலையில் கடைசியில் கையெடுத்து கும்பிட்டு அழுகிறார்.
இந்த வீடியோவில் மன்சூர் அலிகான் பேசியதாவது: வயநாடு.. ஜாதி, மதம் இனம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், சீக்கியன், பவுத்தன், கீழ் ஜாதி, மேல் ஜாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், சினிமா, அரசியல், ஆட்சியாளர்கள், அடிவருடிகள், சந்தர்ப்பவாதிகள், கல்யாணங்கள், பந்தா, பகட்டு தனம் என எதுவுமே இல்லை. இயற்கை.. இயற்கையே யாவும்.. இயற்கையே யாவும்..
கணப்பொழுதில், நொடிப்பொழுதில் உடல்கள் அடித்து செல்லப்பட்டு கட்டங்கள், ஊர்கள் கிராமங்கள் மாயமாகி உள்ளன.
குடும்பம் குடும்பமாக மண்ணோடு மண்ணாக புதைந்து அவல நிலையில் வயநாடு மாறி உள்ளது. இன்னொரு புறம் ராக்கெட், ஏவுகளை குண்டுகள் வீசி கட்டடங்கள், நகரங்கள், ஊர்களை அழித்து ஒழித்து நாசமாக்கும் மனித பிண்டங்கள் ஆட்சியாளர்கள். மனிதம்.. மனிதம் கேள்விக்குறியில் இருக்கிறது. இயற்கையே யாவும். உயிரிழந்த வயநாடு மாமனிதர்களுக்கு என் நெஞ்சார்ந்த நெஞ்சார்ந்த ஆழ்ந்த இரங்கல்கள் எனக்கூறி கண்ணீர் வடித்தார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நடிகர், நடிகைகள் தொடர்ந்து நிதி உதவிகள் செய்து வருகின்றனர். அதாவது கேரளாவில் கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிரமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை பெய்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள், மண் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன.மலைகளில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு என்பது முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்களை மொத்தம் அழித்தது.
பொதுமக்கள், வீடுகளோடு சாலியார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். மொத்தம் 1000க்கும் அதிகமானவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏராளமானவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை என்பது 344 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 200க்கும் அதிகமானவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் தான் மன்சூர் அலிகான் இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications