கர்நாடகாவில் கருணைக் கொலை செய்ய அனுமதி! யாருக்கெல்லாம் இது பொருந்தும்?
பெங்களூர்: எந்த சிகிச்சை அளித்தாலும் குணப்படுத்த முடியாத தீராத நோய் உள்ளவர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை கொடுக்க கர்நாடகாவில் கருணைக் கொலைக்கு அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் குணமடையாமல் தவிக்கும் நிலையில் இருக்கும் நோயாளி கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை இந்த வாய்ப்பு வழங்குகிறது.

கருணைக் கொலையை அனுமதிப்பதா என்பதை தீர்மானிக்க மூன்று மருத்துவர்களைக் கொண்ட இரு குழு அமைக்கப்படும். நோயாளி கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமை குறித்து மாவட்ட அளவில் நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு அமைக்கப்படும்.
சிகிச்சை அளித்தாலும் நோயாளி உயிர் பிழைக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்த பிறகு நோயாளியை கண்ணியமாக இறக்க அனுமதிக்கும் முடிவை இந்தக் குழு எடுக்கும்.
இந்த குழுவினர் நோயாளியின் உடல்நிலையை நன்கு பரிசோதனை செய்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தாலும் பிழைக்க வைக்க முடியாது என உறுதியளிக்கும்பட்சத்தில் இது தொடர்பாக அறிக்கை தயாரித்து இரண்டாம் நிலை மருத்துவக் குழுவிடம் கொடுத்து அந்த குழு அறிக்கையை ஆராய்ந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.
நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் நோயாளி கருணைக் கொலை செய்யப்படுவார். அரசின் இந்த உத்தரவு கோமாவில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு கருணைக் கொலை தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முந்தைய உத்தரவில் சில மாற்றங்கள் செய்து இதற்கான விதிமுறைகளை எளிதாக்கியது. சட்டப்பிரிவு 21 ஐ அடிப்படையாக வைத்தே கருணைக் கொலைக்கு கர்நாடக அரசின் சுகாதாரத் துறை நேற்று அனுமதி அளித்தது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications