மூடா நில மோசடி புகார்.. முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி!
பெங்களூர்: 'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதியளித்துள்ளார். வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் தெரிவித்தது தொடர்பாக சித்தராமையாவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளால் அமைச்சர் நாகேந்திரா பதவி இழந்திருந்தார். இப்போது மூடா முறைகேடு வழக்கு கர்நாடக காங்கிரஸ் அரசின் ஆட்சி குடைய தொடங்கியுள்ளது.

மூடா முறைகேடு: அதாவது மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இந்த விவகாரத்தை யைமப்படுத்தி சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. சட்டசபை, மேல்சபை கூட்டத்திலும் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாஜக வலியுறுத்தல்: இப்படி இருக்கையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தது. அதேநேரம் மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்னேகமயி கிருஷ்ணா என்பவர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருந்தார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
ஆளுநர் அனுமதி: இந்த சூழலை சாதகமாக்கிக்கொண்ட பாஜக, சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மைசூர் நோக்கி பேரணியை நடத்தியது. இதனையடுத்து இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அம்மாநில காங்கிரஸ், ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி செய்யப்படுவதாக விமர்சித்திருக்கிறது. அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா இது குறித்து கூறியதாவது, "கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி செய்யப்படுகிறது. ஆளுநர் தனது அரசியல் சாசன வரம்பை மீறி செயல்படுகிறார். இந்த சதி தொடர்ந்தால் உச்சநீதிமன்றம் சென்று கூட நாங்கள் நீதியை பெற தயங்கமாட்டோம்" என்று கூறியுள்ளார்.
சித்தராமையா விளக்கம்: வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் தெரிவித்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா, "ஆளுநரின் முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தான் எந்த தவறையும் செய்யவில்லை. ஆளுநரின் செயல் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும். ராஜினாமா செய்யும் அளவுக்கு நான் எந்த தவறையும் செய்யவில்லை.
காங்கிரஸ் போராட்டம்: அனைத்து அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும், எம்.எல்.சிக்களும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்க்க சதி நடக்கிறது" என்றார். இதற்கிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்











Click it and Unblock the Notifications