கர்நாடகாவில் கட்டுக்குள் வந்த கொரோனா 3ஆம் அலை.. 100% அனுமதியுடன் பல தளர்வுகள் அறிவிப்பு - முழு தகவல்
பெங்களூர்: கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கர்நாடகாவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட 2ஆம் அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது.
அதன் பின்னர் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்த வந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் அப்படியே நிலைமையை மாற்றியது.

ஓமிக்ரான்
கொரோனா 2ஆம் அலையில் இருந்து கற்ற பாடங்களால் ஓமிக்ரான் அலை ஏற்பட்ட உடன் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அல்லது அதற்கு இணையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா 2ஆம் அலை அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் வைரஸ் பாதிப்பு விரைவாகக் கட்டுக்குள் வந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.

கர்நாடக முதல்வர்
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கிய சமயத்திலேயே தொழில்துறையினர் ஊரடங்கில் தளர்வுகள் கோரி வலியுறுத்தினர். அதன்படி கடந்த ஜன. மாதமே அங்கு வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. அங்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மருத்துவ வல்லுநர்கள் உடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், அம்மாநில பசவராஜ் பொம்மை இப்போது கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளார்

புதிய தளர்வுகள்
இதுவரை அனைத்து திரையரங்குகள், ஜிம்கள், யோகா மையங்கள், நீச்சல் குளங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவை முறையாக கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 100% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்குச் செல்ல 2 டோஸ் வேக்சின் கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள்
குறிப்பாகத் திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,436 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாசிட்டிவ் விகிதமும் 11.31ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாகப் பெங்களூரில் 10 நாட்களில் பாசிட்டிவ் விகிதம் 27.2%இல் இருந்து 11.7ஆகக் குறைந்துள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications