Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெரிசலில் சிக்கி 11 பேர் பலி.. RCB, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர் அணி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நேற்று ரசிகர்கள் பங்கேற்புடன் பேரணி நடந்தது. இதில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆர்சிபி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது கர்நாடக காவல்துறை.

சம்பவம் தொடர்பாக மாநில உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று காலை, வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வி. காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு சார்பில் ஆஜராகியிருந்த அட்வகேட் ஜெனரல் சஷி கிரண் ஷெட்டி, பிரச்சனையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.

RCB IPL 2025 Karnataka High Court Karnataka

சம்பவம் எப்படி நடந்தது? பாதுகாப்பு பணியில் எத்தனை காவலர்கள் இருந்தனர்? மாநில அரசு மக்களின் உயிரை பாதுகாக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது? என்பது குறித்து விரிவாக பதிலளிக்க வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணை மதியம் 2.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

சுமார் 10,000 போலீசார்

இதனையடுத்து, அரசு தரப்பில் மதியம் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டிருந்தது. அதில், பாதுகாப்பு பணியில் நகர காவல் ஆணையர், துணை ஆணையர்கள் உட்பட 10,000க்கும் அதிகமான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பாதுகாப்பு பணியில் 5000 போலீசார் ஈடுபட்டிருந்ததாக கூறியிருந்தார். இப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் 10,000 போலீசார் என்று கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

மேலும் அரசு தரப்பு நீதிபதி கூறுகையில், "நீதிமன்றம் எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறோம். சம்பவ இடத்தில் தண்ணீர் டேங்கர்கள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை முன்னெப்போதையும் விட அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்ததால் நிலைமை கையை மீறி சென்றது. சின்னசாமி மைதானத்தின் மொத்த கொள்ளவு 35,000 பேர்தான். ஆனால் பல ஆயிரக்கணக்கனோர், இலவசமாக உள்ளே நுழைந்தவிடலாம், அனுமதி கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் மைதானத்தில் மொத்தம் 30,000 டிகெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டன. மைதானத்தில் டிக்கெட் விற்பனை மற்றும் கூட்ட மேலாண்மையை ஆர்.சி.பி. மற்றும் அதன் நிகழ்வு மேலாளர்கள் கையாண்டனர்.

உயிரிழப்பு எப்படி ஏற்பட்டது?

மொத்தம் 21 வாசல்கள் இருந்தன. அனைத்திலும் மக்கள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒரு கட்டத்தில் கூட்டம் முண்டியடித்தது. அதில், கேட் 7, கேட் 6, மற்றும் குயின்ஸ் சாலையில் தலா 4, 3, 4பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்" என்று கூறினார்.

பின்னர் பதிலளித்த நீதிமன்றம், "கொண்டாடும் நோக்கம் ஒரு சோகத்திற்கு வழிவகுத்துள்ளது. சோகத்திற்கான காரணங்களையும், சோகத்தைத் தடுத்திருக்க முடியுமா என்பதையும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவும் நாங்கள் தானாக முன்வந்து வழக்கை கையில் எடுத்திருக்கிறோம்" என்று கூறியது.

ஆர்சிபி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது FIR

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, "இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சம்பவம் நடந்த நாளன்று இரவே இதற்கான பணிகள் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டுவிட்டது" என்று தெரிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது ஆர்சிபி அணி மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முதன் முறையாக கப் அடித்திருந்த ஆர்சிபி ஆணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பாகவும், கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பாகவும் தனித்தனியாக பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. பெங்களூர் விதானசௌதாவின் முன்பகுதியில் மாநில அரசு சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தார். அங்கிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள சின்னசாமி மைதானம் வரை பேரணி நடக்க இருந்தது.

தமிழக பெண் உயிரிழப்பு

ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கூடினர். மைதானத்தின் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 35,000. ஆனால் லட்சக்கணக்கில் ரசிகர்கள் கூடியதால் மைதானம் பிதுங்கி வழிந்தது. இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி 11 பேர் வரை உயிரிழந்தனர். இதில் திருப்பூர் உடுமலையை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்புக்கு நிவாரணம்

33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே முழுமையாக ஏற்கும் என்றும் முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். இருப்பினும் இந்த சம்பவத்திற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததுதான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இதனை மறுத்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், உயிரிழப்புகளில் கூட அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். பலி தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+