பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் மத சுதந்திரம் உள்ளது! மசூதிகளில் ஸ்பீக்கர்களுக்கு தடை செய்ய முடியாது! கர்நாடக ஐகோர்ட்

Google Oneindia Tamil News

பெங்களூர்: மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் பிரார்த்தனை அழைப்புகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுக்கப்படும். இருப்பினும், இந்த முறைக்கு சில வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள மசூதிகளில் இதுபோல பிரார்த்தனைக்கு அழைப்பு விடுக்கும். அஸான் முறைக்குத் தடை விதிக்கக் கோரி பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு டெல்லியில் 6 மாதம் 'இலவச' பங்களா ஒதுக்கீடு- மத்திய அரசு ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு டெல்லியில் 6 மாதம் 'இலவச' பங்களா ஒதுக்கீடு- மத்திய அரசு

 வழக்கு

வழக்கு

அதில் மசூதிகளில் ஒலிபரப்பப்படும் அழைப்புகளில் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் இருப்பதாகவும் இதனால் இந்த ஒலிபெருக்கிகளைக் கைப்பற்ற வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய அரசியலமைப்பில் மத சுதந்திரத்திற்கான உரிமை இருப்பதைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

 விசாரணை

விசாரணை

அதேநேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவுக்கு மேல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது இல்லை என்பதை உறுதி செய்ய மாநில அரசுக்கு அறிவுறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி எஸ் விஸ்வஜித் ஷெட்டி அமர்வு, "இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26வது பிரிவுகள் இந்திய நாகரிகத்தின் சிறப்பியல்பான மத சகிப்புத்தன்மையின் கொள்கையைக் கொண்டு இருக்கிறது.

 உரிமை உள்ளது

உரிமை உள்ளது

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25(1) அனைத்து நபர்களுக்கும் தங்கள் மதத்தைச் சுதந்திர பின்பற்றவும், பிரசாரம் செய்யவும் அடிப்படை உரிமையை வழங்குகிறது. அதேநேரம் இது முழுமையான உரிமை அல்ல.. இதற்கும் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் இது மூன்றாம் பகுதியின் பிற விதிகளுக்கு உட்பட்டதே ஆகும். இந்தியாவில் மனுதாரரும் சரி மற்றவர்களும் சரி தங்கள் மதத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கும் உரிமை உள்ளது.

 தள்ளுபடி

தள்ளுபடி

அஸான் என்பது பிரார்த்தனை செய்வதற்கான அழைப்பு. அதேநேரம் அஸான் உள்ளடக்கங்கள் மனுதாரர் குறிப்பிட்டதை போலப் பிற மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் அதை ஏற்க முடியாது. அதேநேரம் அஸான் என்ற இந்த பிரார்த்தனை அழைப்பு மூலம் இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள அடிப்படை உரிமையை மீறுகிறது என்பது மனுதாரரின் வாதமாக இல்லை. எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்.

 அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்


அதேநேரம் அவை ஒலி மாசு விதிகள் சட்டத்திற்கு உட்பட்டு இருப்பதை உறுதி செய்யுமாறு நீதிபதி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவுக்கு மேல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது இல்லை என்பதை உறுதி செய்ய மாநில அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

English summary
Karnataka High Court disposed case that raised objections to azan at mosques: (மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கி குறித்து கர்நாடக ஐகோர்ட் முக்கிய உத்தரவு) Karnataka High Court on azan calls at mosques.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X