Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா வழக்கு.. ரூ.100 கோடி அபராதம் கட்டுவது யார்? கவனம் பெற்ற கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு! ஏன்?

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்தாலும் அவரது சொத்து அல்லது வாரிசுதாரரிடம் இருந்து அபராதம் செலுத்தப்பட வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்தாலும் அவரது சொத்து அல்லது வாரிசுதாரரிடம் இருந்து அபராதம் செலுத்தப்பட வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக வழக்கு ஒன்றில் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கின்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அதனை கட்டுவது யார்? யாரிடம் வசூலிக்கப்படும்? என்பது தொடர்பான விவாதம் கிளம்பி உள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாசனை சேர்ந்தவர் தொட்டில் கவுடா. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் விதிகளை மீறி மின்இணைப்பு பயன்படுத்தி வந்ததாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பான வழக்கு ஹாசன் கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2003 மின்சார சட்டம் 135 மற்றும் 138 பிரிவுகளின் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டது.

ரூ.29,204 அபராதம்

ரூ.29,204 அபராதம்

இதையடுத்து ஹாசன் கூடுதல் செசன்சு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி தொட்டில் கவுடா ரூ.29,204 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தொட்டில் கவுடா பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் செசன்சு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் தான் மேல்முறையீடு செய்த தொட்டில் கவுடா காலமானார். இந்நிலையில் தற்போது தொட்டில் கவுடாவின் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதி சிவசங்கர் அமரன்னவர் அமர்வு அவருக்கு விதித்த அபராதத்தை உறுதி செய்தது. இந்த வேளையில் வழக்கறிஞர், வாரிசுகள் வழக்கில் தொடர்பு இல்லாமல் உள்ளனர் என்றார்.

 வாரிசுகளிடம் இருந்து வசூலிக்க..

வாரிசுகளிடம் இருந்து வசூலிக்க..

வழக்கறிஞரின் இந்த கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக நீதிமன்றம், ‛‛ மனுதாரர் மரணமடைந்தாலும் அபராதம் செலுத்தப்பட வேண்டும். அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படாது. இந்த அபராதத்தை அவரது சொத்தில் இருந்து அல்லது வாரிசுகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்'' என கூறி அதிரடியாக உத்தரவிட்டது.

ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம்

ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம்

இந்நிலையில் தான் தற்போது ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் வசூலிக்கப்படுமா? என்ற விவாதம் தொடங்கி உள்ளது. மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அவரது தோழியான சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

வசூலிக்கப்படுமா?

வசூலிக்கப்படுமா?

இதில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். ஆனால் ஜெயலலிதா தண்டனை அனுபவிக்காமல் மரணமடைந்தார். மேலும் தற்போது வரை ஜெயலலிதாவின் அபராததொகை செலுத்தப்படாமல் உள்ள நிலையில் தான் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கவனம் பெற்றுள்ளது. மேலும் ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் வசூலிக்கப்படுமா? என்ற விவாதம் கிளம்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+