Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ஒருநாள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறைக்கு இடைக்கால தடை - கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் 18 வயது முதல் 52 வயது வரையிலான அரசு - தனியார் பெண் பணியாளர்களுக்கான மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவில் தொழில்துறை அமைச்சராக சந்தோஷ் லாட் உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகாவில் நீண்டகாலமாக அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை கர்நாடகா அரசு பரிசீலனை செய்தது.

menstrual leave karnataka high court

இதையடுத்து பேராசிரியை சப்னா கிறிஸ்ட் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாதம் ஒருமுறை என்று மொத்தம் 12 நாட்கள் அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை கர்நாடகா அரசு ஏற்றது.

இதையடுத்து கடந்த நவம்பர் 20ம் தேதி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது. 1948 தொழிற்சாலை சட்டம், 1961 கர்நாடகா கடகைள் மற்றுமு் வணிக நிறுவன சட்டம், 1951ம் ஆண்டுக்கான தோட்ட தொழிலாளர் சட்டம், 1966ம் ஆண்டுக்கான பீடி தொழிலாளர் (வேலைவாய்ப்பு சட்டம்), 1961ம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் இயங்குவோர் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இது அரசு ஊழியர்களுக்கு பொருந்தாமல் இருந்தது. பிறகு பெங்களூர் ஹோட்டல்கள் சங்கம் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த விடுப்பு பொருந்தும் என்று உத்தரவிட்டது. அதன்பிறகு வழக்கை டிசம்பர் 9 ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி 18 வயது முதல் 52 வயது நிரம்பிய பெண் ஊழியர்கள் மாதம் ஒருமுறை மாதவிடாய் விடுமுறையை எடுத்து கொள்ளலாம். இதற்கு எந்த மருத்துவ ஆவணங்களையும் காண்பிக்க வேண்டியது இல்லை. இந்த விடுமுறையை எடுக்கும்போதும் சம்பளம் பிடிக்கப்படாது. அதேபோல் ஒருமாதத்தில் விடுமுறை எடுக்காவிட்டால் அதனை இன்னொரு மாதத்தில் சேர்த்து எடுக்க முடியாது நிரந்தரம், ஒப்பந்தம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பணியில் உள்ள ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் மாதவிடாய் விடுப்பு தொடர்பாக பெங்களூர் ஹோட்டல்கள் சங்கம் மற்றும் Avirata AFL கனெக்ட்டிவிட்டி சிஸ்டம்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவை இன்று நீதிபதி எம் ஜோதி விசாரித்தார். அப்போது கர்நாடகா அரசின் மாதவிடாய் விடுப்பு தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதனால் கர்நாடகாவில் தொழிற்சாலை உள்பட அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு தொடர்பான அரசின் உத்தரவை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மனுதாரர்கள் தரப்பில், ‛‛மாதவிடாய் விடுப்பு வழங்க நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சட்டத்தில் எந்த இடமும் இல்லை. இதனால் அரசு திடீரென்று ஒரு அறிவிப்பின் மூலமாக சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை மாதம் ஒருமுறை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக கர்நாடகா அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தொழில்அமைப்புகளிடம் கலந்தாலோசிக்கவில்லை'' என்று கூறப்பட்டு இருந்தது. இதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில் கர்நாடகா அரசு பிறப்பித்த மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுமுறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் அரசு தனது தரப்பு வாதத்தை அறிக்கையைாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+