இன்சூரன்ஸ் பணத்துக்காக தன் சாயலில் உள்ள பிச்சைக்காரன் கொலை.. கர்நாடகாவை அதிரவைத்த கணவன் மனைவி
பெங்களூரு: இன்சூரன்ஸ் பணத்தை சுருட்டுவதற்காக நடக்கும் பல மோசடிகளை பார்த்திருப்போம். அப்படி கர்நாடகா மாநிலத்தில் இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவன் மனைவி அரங்கேற்றியுள்ள ஒரு கொலை திடுக்கிட வைக்கிறது. தன்னை போலவே இருக்கும் ஒருவரை கொலை செய்து இன்சூரன்ஸ் பணத்தை அபேஸ் செய்ய திட்டமிட்ட கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்கியது எப்படி.
ஆயுள் காப்பீடு எனப்படும் லைப் இன்சூரன்ஸை வைத்து ஏராளமான மோசடிகள் அரங்கேறும். சமீபத்தில் கூட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருந்தது. இன்சூரன்ஸ் பணத்தை அபகரிக்க தன் சொந்த மனைவியை கணவர் ஒருவர் பாம்பு விஷத்தினை ஏற்றி கொலை செய்திருந்தார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூர் புறநகரான ஹோஸ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி கவுடா. சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி மனைவி ஷில்பாராணி. இதனிடையே கடந்த 13ஆம் தேதி அதிகாலை முனிசாமி விபத்தில் உயிரிழந்துவிட்டதாக காவல்துறைக்கு தகவல் சென்றது. பஞ்சரான தனது கார் டயரை மாற்றும்போது லாரி மோதி, முனிசாமி உயிரிழந்ததாக புகார் சொல்லப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், ஆவணங்களை கைப்பற்றி அவரின் மனைவி ஷில்பாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற ஷில்பா அது தன் கணவர் தான் என்று உறுதிபடுத்தி கதறி அழுதுள்ளார். அதைத் தொடர்ந்து உறவுகள் சூழ இறுதி காரியமும் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அனைவருமே முனுசாமி உயிரிழந்துவிட்டார் என்று நம்பினார்கள்.
ஷில்பாவும் கணவன் இறப்புக்கு இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்கான நடைமுறையை பின்பற்ற தொடங்கினார். அங்கு தான் டிவிஸ்ட் ஏற்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் முனுசாமி உயிரிழந்தது விபத்தில் இல்லை. கழுத்து நெறிக்கப்பட்டுள்ளதில் உயிரிழந்தார் என்று தெரியவந்தது. பிறகுதான் உயிரிழந்தது முனுசாமியே இல்லை. அது வேறு நபர் என்று தெரியவந்திருக்கிறது.
போலீஸ் விபத்தை ஏற்படுத்திய தேவேந்திர நாயக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். முனுசாமி தலைமறைவாக இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தனது உறவினர் ஶ்ரீனிவாஸ் என்பவரை எதேர்ச்சையாக சந்திக்க நேரிட்டது. ஶ்ரீனிவாஸ் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவர் உடனடியாக சம்மந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
அதேநேரத்தில் லாரி ஓட்டுநர் தேவந்திர நாயக்கும் காவல்துறையிடம் உண்மையை சொல்லியிருக்கிறார். பிறகு காவல்துறை முனுசாமி அவரின் மனைவி ஷில்பா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் கூறுகையில், “முனுசாமி பல கோடி ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் எடுத்துள்ளார். சமீபகாலமாக அவர் கடன் நெருக்கடியில் இருந்திருக்கிறார். இதனால் இன்சூரன்ஸ் பணத்தை அபகரிக்க திட்டம் தீட்டினார்கள்.
இதற்கு ஷில்பா மூளையாக செயல்பட்டுள்ளார். அவரின் ஐடியா படி முனுசாமி உருவ சாயலில் இருக்கும் பிச்சைக்காரர் ஒருவரை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக இவர்களே அந்த பிச்சைக்காரரை கடத்தி கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடியுள்ளனர். தற்போது வரை இந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்னர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.” என்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications