மனைவியும் "அந்த" பக்கெட்டும்.. இவரெல்லாம் ஒரு மனிதனா நெஞ்சை பதறடிக்கும் கர்நாடகா.. மைசூரில் விநோதம்
பெங்களூரு: "சந்தேகம்" புத்திக்குள் புகுந்துவிட்டாலே, அந்த குடும்பம் அதோடு நாசமா போயிட வேண்டியதுதான்.. சைக்கோ கணவனால் ஒரு பெண் பட்ட பாட்டை பாருங்க..!!
கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ளது எச்.மாடகெரே என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சுனலைய்யா.. இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. ஆனால், இவர் தந்த டார்ச்சரால் அந்த மனைவி ஓடிவிட்டார்.. பிறகு 2வது கல்யாணம் செய்தார்.. அந்த மனைவியும் ஓடிப்போய்விட்டார்.

3வது திருமணம்: அதனால் 3வது கல்யாணம் செய்தார்.. 12 வருடங்களுக்கு முன்பு எச்.டி கோட் என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணை கல்யாணம் செய்தார். அந்த 3வது மனைவியின் பெயர் சுமா.
ஆனால், அவரை கல்யாணம் செய்ததிலிருந்தே, சுனலைய்யாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.. சுமாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டார்.. அதனால், யாருமே சுமாவை பார்த்துவிடக் கூடாது என்று, வீட்டிலேயே ஒரு ரூமில் அடைத்துவைத்து விட்டார்.. சுமா எங்கேயும் தப்பித்து ஓடிவிடக்கூடாது என்பதற்காக, அவரது அந்த ரூமை பூட்டிவிட்டார்.. மொத்தம் 3 பூட்டுக்களை போட்டார்.
விளக்குகள்: ரூமில் இருந்த விளக்குகளை பிடுங்கிவிட்டார்.. கரண்ட் கனெக்ஷனையும் கட் பண்ணிவிட்டார்.. இருட்டு ரூமில் சுமாவை அடைத்து வைத்தார்.. தன்னை தவிர வேறு யாரிடமும் சுமா பேசக்கூடாது என்பதற்காக, வீட்டின் ஜன்னல்களையும் இழுத்து சாத்தி பூட்டு போட்டார்..
அது ஒரு குட்டி ரூம் என்பதால், பாத்ரூம் எதுவுமே அங்கில்லை.. அதனால், ஒரே ஒரு பக்கெட் மட்டும் கொண்டுவந்து சுமாவிடம் தந்துள்ளார் சுனலைய்யா.. அந்த பக்கெட்டிலேயே தினமும் மலம், சிறுநீர் கழிக்குமாறும் சொல்லி உள்ளார்.. சுமாவும், அந்த பக்கெட்டிலேயே தினமும் மலம், சிறுநீர் கழித்து வைத்தால், அதை காலையில் சுனலைய்யா கொண்டுபோய் கொட்டிவிட்டு வருவாராம்..
சுமா பரிதாபம்: இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் சுனலைய்யா, சுமாவை மிரட்டி வந்திருக்கிறார். இந்த கொடுமையெல்லாம் 12 வருஷமாகவே நடந்து வந்திருக்கிறது. இத்தனைக்கும் இவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த 12 வருடமாகவே, சுமா எங்கே? என்று சொந்தக்காரர்கள் உட்பட எல்லாருமே கேட்டுள்ளார்கள். ஆனால் யாரிடமும் சரியாக பதில் சொல்லவில்லையாம் சுனலைய்யா.
12 வருடங்கள் கடந்தாலும் உண்மையை மறைக்க முடியுமா என்ன? இந்த விஷயம் வெளியே வக்கீல் ஒருவருக்கு தெரியவந்துள்ளது.. அவர் பெயர் சித்தப்பாஜி சாந்த்வான் கேந்திரா..
பூட்டுக்கள்: 12 வருடங்களாக ஒரு பெண், வீட்டுக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டு, அடைத்து வைத்திருப்பது குறித்து போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் உடனடியாக சுனலைய்யா வீட்டிற்கு வந்தார்கள்..
ஏகப்பட்ட பூட்டுக்களை போட்டு வைத்திருந்த அந்த ரூமின் கதவை உடைத்து நொறுக்கினார்கள்.. சுமாவையும் மீட்டுவிட்டார்கள். சுமாவையும், குழந்தைகளையும் பெற்றோரிடம் ஒப்படைத்த எச்.டி.கோட் போலீஸார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், மிஸ்டர் சுனலைய்யா கிரேட் எஸ்கேப்..!
மர்மம்: எங்கே போனார் என்றே தெரியவில்லை.. தப்பியோடிய சுனலைய்யாவை போலீஸார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. சுமா பட்ட அவஸ்தையை சகிக்க முடியாமல் தனக்கு தெரிந்த வக்கீலிடம் சொன்னதாக தெரிகிறது. அதற்கு பிறகுதான் போலீசுக்கு விஷயம் போயிருக்கிறது.
இதுகுறித்து சுமா சொல்லும்போது, "என் கணவர் என்னை பூட்டி வைத்துவிட்டார். என் குழந்தைகளுடன் பேசக்கூட என்னை விடவில்லை.. காரணமே இல்லாமல் என்னை பலமுறை அடித்துவிடுவார்.. எங்க கிராமத்தில் உள்ள எல்லாருக்கும் இது பற்றி தெரியும்.. ஆனால், எல்லாரும் அவரை பார்த்து பயப்படுவாங்க.. நைட் எப்பவுமே லேட்டாகதான் வீட்டுக்கு வருவார்.. நள்ளிரவு வரும்வரை, என் குழந்தைகளை என்னுடன் இருக்க அனுமதிக்க மாட்டார். அந்த ரூமில் இருக்கும் சின்ன ஜன்னல் வழியாகத்தான், என் குழந்தைகளுக்கு சோறு ஊட்டிவிடுவேன்" என்று கண்ணீர் மல்க சொல்கிறார் சுமா.
பரபரப்பு: இந்த சம்பவம் மைசூரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அதைவிட முக்கியமாக, முதல் 2 மனைவிகள் ஏன் ஓடிப்போனார்கள் என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications