ரூ.1 கோடி.. அந்தரங்க போட்டோக்களால் ஐபிஎஸ் ரூபாவுக்கு சிக்கல்? ஐஏஎஸ் ரோகினி அடுத்த மூவ் - அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரிக்கும், ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும் இடையே கடும் மோதல் உள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியின் அந்தரங்க போட்டோக்களை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது பேஸ்புக்கில் பகிர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததே இதற்கு காரணம். இருவரின் மோதல்கள் கர்நாடகாவை அதிர செய்துள்ள நிலையில் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ரோகினி சிந்தூரி, ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பிரச்சனை இன்னும் விஸ்வரூபமாகி உள்ளது. மேலும் ரோகினி சிந்தூரியின் இந்த செயல்பாடு ரூபாவை கடும் கோபமடைய செய்துள்ளது.
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக ரோகினி சிந்தூரியும், ஐபிஎஸ் அதிகாரியாக சசிகலா புகழ் ரூபாவும் உள்ளனர். ரோகினி சிந்தூரி கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராகவும், ரூபா கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றினர்.
இந்நிலையில் தான் ரூபா, ரோகினி சிந்தூரிக்கு இடையே கடும் மோதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது ரூபா தான்.

அந்தரங்க போட்டோக்கள்
அதாவது ரோகினி சிந்தூரியின் தனது தனிப்பட்ட (அந்தரங்கம்) படங்களை 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக கூறி 7 போட்டோக்களை ரூபா தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். மேலும் மைசூரில் பணியாற்றியபோது ரோகினி சிந்தூரிக்கும், அங்குள்ள எம்எல்ஏ சாரா மகேசுக்கும் இடையே மோதல் இருந்த நிலையில் இருவரும் உணவகத்தில் சந்தித்து பேசும் போட்டோவையும் ரூபா வெளியிட்டு இருந்தார். மேலும் ரோகினி சிந்தூரி மீது ஏராளமான ஊழல், முறைகேடு புகார் இருந்தும் இன்னும் விசாரிக்கப்படவில்லை எனக்கூறி 20 கேள்விகள் கேட்டிருந்தார்.

பொறுப்புகள் பறிப்பு
இதற்கு ரோகினி சிந்தூரி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ரூபா ஒரு மன நலம் பாதித்தவர். தன்னை பற்றி அவதூறு பரப்பும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை, 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். மேலும் இருவரும் வகித்த வந்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டு அவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் வழக்கு
மேலும் இதுதொடர்பாக ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகிய 2 பேரும் பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை தனித்தனியே சந்தித்து புகார்கள் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து பொதுவெளியில் இருவரும் கருத்து தெரிவிக்க கூடாது என வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி கேட்டு நோட்டீஸ்
இது ஒருபுறம் இருக்க தற்போது ரோகினி சிந்தூரி, ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‛‛எழுத்துப்பூர்வமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இந்த மன்னிப்பை சமூக வலைதளங்களில் பகிர வேண்டும். அதோடு என்னை பற்றிய அவதூறான பதிவுகளை உடனே வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். மேலும் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது, மனவேதனை அளித்தது ஆகியவற்றுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். இதை செய்யவிட்டால் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு
முன்னதாக, தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக கூறி ரோகினி சிந்தூரி பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூபாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். சமூகவலைதளங்களில் தன்னை பற்றி கருத்து வெளியிட ரூபாவுக்கு தடை விதிக்க வேண்டும் என பெங்களூர் 74 ஆவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரோகினி சிந்தூரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications