'3,000 ப்ளூ பிலிம்' பிரஜ்வல்-க்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்-வெளிநாடுகளில் வலை வீசி தேடும் போலீஸ்!
பெங்களூர்: 300 பெண்களை நாசமாக்கி 3,000 ஆபாச வீடியோக்கள் (ப்ளூ பிலிம்) எடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கர்நாடகா ஹாசன் தொகுதி எம்பியும் அத்தொகுதியில் தற்போதைய லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுள்ள வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக இண்டர்போல் மூலம் ப்ளூ கார்னர் (புளூர் கார்னர்) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
கர்நாடகா ஹாசன் லோக்சபா தொகுதி எம்பியும் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவருமான பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா மீது பலாத்கார வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கு விசாரணையை நடத்தி வருகிறது. இவ்வழக்குகளில் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பி ஓடிவிட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணா மீது தொடர்ந்து பலாத்கார புகார்களை பெண்கள் கொடுத்து வருகின்றனர். இதனால் வெளிநாட்டுக்கு தப்பிப் போன பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் சிபிஐ, இண்டர்போல் மூலம் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் பிரஜ்வல் ரேவண்ணா வலை வீசி தேடப்பட்டு வருகிறார். அதாவது பிரஜ்வல் ரேவண்ணா எல்லைப் பகுதிகளில் இருந்தாலோ, விமான நிலையங்களில் வந்திறங்கினாலோ உடனே கர்நாடகா சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு துபாயில் பதுங்கி இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகாவின் மங்களூர் விமான நிலையம் வரப்போவதாக தகவல் கிடைத்தது. இதனால் மங்களூர் விமான நிலையத்திலேயே பிரஜ்வலை கைது செய்ய போலீசார் நாள் முழுவதும் காத்திருந்தனர். ஆனால் பிரஜ்வல் மங்களூர் வரவில்லை. அத்துடன் பெங்களூர் விமான நிலையத்திலும் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய போலீசார் காத்திருந்தும் வீணாணது.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் மூளையான அவரது ஓட்டுநர் கார்த்திக் கவுடா தொடர்ந்தும் மலேசியாவிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications