கர்நாடகா: போலி இன்சூரன்ஸ் தந்து வாக்காளர்களை மோசடி செய்த ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு
பெங்களூர்: போலி இன்சூரன்ஸ் தந்து வாக்காளர்களை மோசடி செய்த வழக்கில் ஜேடிஎஸ் கட்சியின் கெளரி சங்கர் எம்.எல்.ஏ. பதவியை பறித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் கெளரி சங்கர் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
2018- ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் தும்கூர் ரூரல் சட்டசபை தொகுதியில் ஜேடிஎஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் டிசி கெளரி சங்கர். 2008-ம் ஆண்டு மதுகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் கெளரிசங்கர். 2008, 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் பாஜகவின் சுரேஷ் கவுடா இத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தார்.

2018-ம் ஆண்டு தேர்தலில் தும்கூர் ரூரல் தொகுதியிக் 5640 வாக்குகள் வித்தியாசத்தில் கெளிரி சங்கர், பாஜகவின் சுரேஷ் கவுடாவை வீழ்த்தினார். ஆனால் சுரேஷ் கவுடா, கெளரி சங்கர் வெற்றியை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுரேஷ் கவுடா தமது மனுவில், தும்கூர் ரூரல் தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட கெளரி சங்கர், போலி இன்சூரன்ஸ் பத்திரங்களை வாக்காளர்களுக்கு கொடுத்து வாக்குகளைப் பெற்றார். வாக்காளர்களை மோசடி செய்து வாக்கு பெற்றதால் கெளரி சங்கர் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என சுரேஷ் கவுடா தமது மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இதனை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், தும்கூர் ரூரல் தொகுதியில் கெளரி சங்கர், போலி இன்சூரன்ஸ் பத்திரங்களை கொடுத்து வாக்காளர்களிடம் மோசடியாக வாக்குகள் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் கெளரி சங்கர் தேர்தல் வெற்றி செல்லாது. எம்.எல்.ஏ. பதவியி இருந்து கெளரி சங்கர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. அதேநேரத்தில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே 2 தகுதி நீக்கம், பதவி பறிப்பு விவகாரங்கள் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இவிவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.
அதேபோல் லட்சத்தீவுகள் தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்பி முகமது பைசல், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. ஆனால் பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் 10 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதும் பைசல், எம்பி பதவி பறிப்பு வாபஸ் பெறப்படவில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பைசல் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் பைசல் எம்பி பதவி பறிப்பு உத்தரவை லோக்சபா செயலகம் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications