பாஜக கூட்டணி-குமாரசாமியின் மஜத 'கதை' குளோஸ்? கர்நாடகாவில் கட்சி உடைந்தது! மாநில தலைவர் அறிவிப்பு!
பெங்களூர்: கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் ( ஜேடிஎஸ்) கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறாது; இதையும் மீறி முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி வைப்பது அவர்கள் விருப்பம்; என் தலைமையிலான ஜேடிஎஸ் கட்சியே ஒரிஜனல்; பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை என மாநில தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் இப்ராஹிம் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கடந்த செப்டம்பர் 22-ந் தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் தேவகவுடாவும் உறுதிப்படுத்தினார்.

பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு: ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநில பிரிவுகள், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கர்நாடகாவில் முஸ்லிம் தலைவர்கள் கொத்து கொத்தாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்தனர். மேலும் கர்நாடகா மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் இப்ராஹிம், பாஜகவுடனான கூட்டணியை கடுமையாக எதிர்த்து வந்தார்.
பாஜக கூட்டணியை நிராகரிக்கிறோம்: இந்நிலையில் பாஜகவுடனான கூட்டணியை தமது தலைமையிலான கர்நாடகா மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் ஏற்காது; நிராகரிக்கிறது என மீண்டும் இப்ராஹிம் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன் மூலமாக கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டாக பிளவுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
தேவகவுடாவுக்கு வேண்டுகோள்: பாஜகவுடனான கூட்டணி விவகாரம் குறித்து இப்ராஹிம் இன்று கூறியதாவது: எங்களது முதலாவது நிலைப்பாடு, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையாது. இரண்டாவது நிலைப்பாடு, பாஜகவுடனான கூட்டணிக்கு கட்சியின் நிறுவனர் தேவ கவுடா ஒப்புதல் வழங்கக் கூடாது. கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் இன்னமும் தேவகவுடா மீது மரியாதையும் மதிப்பும் வைத்துள்ளனர். ஒரு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் தேவகவுடாவிடம் நாங்கள் கேட்பது, பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது; அதற்கு ஒப்புதல் தரக் கூடாது என்பதுதான். இது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு தேவகவுடாவை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளது.
நானே தலைவர்.. : மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா மாநில தலைவர் நான். கர்நாடகா மாநிலத்தில் கட்சியின் நலன் கருதி நான் முடிவெடுக்க அதிகாரம் உண்டு. பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதுதான் அந்த முடிவு. இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒன்றுதான். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை.
என் தலைமையில்தான் கட்சி: ஒருவேளை தேவகவுடாவும் குமாரசாமியும் பாஜகவுடன்தான் கூட்டணி அமைப்போம் என விரும்பி சென்றால் அவர்கள் போகட்டும். எங்களைப் பொறுத்தவரையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்கிறோம். அதற்கு மேல் பாஜகவுடன் அவர்கள் கூட்டணி அமைத்தால் அவர்களை நாங்கள் தடுக்கவும் முடியாது. அனைத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்களும் பொறுமை காக்க வேண்டும். நேரம் வரும் போது உரிய தகவல்கள் பகிரப்படும். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்கள் எங்களுடனேயே இருக்கின்றனர். யார் யார் தொடர்ந்தும் எங்களுடன் இருக்கிறார்கள் என்ற விவரத்தை உடனே வெளியிட முடியாது. அப்படி விவரங்களை பகிரங்கப்படுத்துவது அவர்களுக்கு நெருக்கடியைத் தரும். இவ்வாறு இப்ராஹிம் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications