ஓடுங்க கூர்க் பக்கம்.. கர்நாடகாவில் மீண்டும் ஆரம்பித்த ரிசார்ட் அரசியல்
Recommended Video
பெங்களூர்: ஆபரேஷன் தாமரை திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக சந்தேகிக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமை, தங்கள் எம்எல்ஏக்களை குடகு மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு அனுப்பி வைக்கிறது.
ஏற்கனவே இந்த கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், ராஜினாமா எண்ணிக்கை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக எம்எல்ஏக்களை குடகு மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

முதல்வர் குமாரசாமி தவிர்த்து பிற அனைத்து மத சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் குடகு மாவட்டம் சோம்வார்பேட்டையிலுள்ள, ரிசார்ட்டுக்கு இன்று இரவு கிளம்ப உள்ளனர்.
ஏற்கனவே அங்கு 35 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர், குமாரசாமியை தவிர்த்துவிட்டு, அந்த கட்சியின் எஞ்சிய 33 எம்எல்ஏக்கள் அங்கு செல்ல உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது, மொத்தம் 37 தொகுதிகளை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வென்றது. காங்கிரஸ் கட்சி 79 தொகுதிகளை பெற்றது.
இப்போது மதசார்பற்ற ஜனதா தளத்தின் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டதால் மற்றவர்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட உள்ளனர். இதன் மூலமாக கர்நாடகாவில் மீண்டும் ரிசார்ட் அரசியல் ஆரம்பித்துள்ளது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!












Click it and Unblock the Notifications