கர்நாடகாவில் நிலச்சரிவு! இடுப்புக்கு கீழ் இருக்கும் ஆண் சடலம் யாருடையது? டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி
பெங்களூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள நிலச்சரிவில் சிக்கிய விபத்தில் இடுப்புக்கு கீழ் பாகம் மட்டும் கிடைத்த நிலையில் அது டிஎன்ஏ பரிசோதனை மூலம் யாருடையது என்ற தகவல்கள் உறுதியானது. இந்த கோரச் சம்பவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அதில் 3 பேர் தமிழர்கள் ஆவார்கள்.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் கர்நாடகா மாநிலம் ஷிரூர் அருகே கடந்த ஜூலை 16 ஆம் தேதி அதாவது 10 நாட்களுக்கு முன் கங்கவள்ளி ஆற்றின் கரையோரம் நிலச்சரிவு ஏற்பட்டது.

அந்த நிலச்சரிவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி இழுத்து செல்லப்பட்டது. அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்த தம்பதி, அவர்களுடைய குழந்தைகள், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர், நடத்துநர், மற்றும் கேரளா கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அர்ஜுன் ஆகிய 7 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.
இதில் சிக்கிய 6 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். அதில் டாரஸ் வாகனத்துடன் நிலச்சரிவில் சிக்கிய கேரளாவை சேர்ந்த அர்ஜுனை மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். இவர் 200 டன் எடை கொண்ட மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு அந்த வழியே சென்ற போது நிலச்சரிவில் சிக்கியுள்ளார். தனது மகனை மீட்குமாறு அவருடைய தாய் அஞ்சு, கேரள அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே கர்நாடகா அரசு சரியாக மீட்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என அர்ஜுனின் தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். அங்கு உயர்நீதிமன்றம் செல்லுமாறு அறிவுறுத்தியதால் அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய , மாநில அரசை விளக்கம் தரவும் என ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் கங்கவள்ளி ஆற்றில் மரக்கட்டைகள் மிதந்து வந்ததால் அர்ஜுன் தனது லாரியுடன் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 15க்கும் மேற்பட்ட குழுவினர் அர்ஜுனை தேடி வருகிறார்கள். அர்ஜுன் 20 அடி ஆழத்தில் புதையுண்டதாக தெரிகிறது. அவரை தேடி வருகிறார்கள். தற்போது வரை கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சின்னப்பன், முருகன் ஆகிய லாரி ஓட்டுநர்களும் ஆவர்.
இந்த நிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த டிரைவர் சரவணனை தேடி வந்தனர். அப்போது இடுப்புக்கு கீழ் பாகம் மட்டுமே இருக்கும் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது சரவணனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சடலத்திற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்தபோது சரவணனின் தாயாரின் டிஎன்ஏவுடன் அந்த சடலத்தின் டிஎன்ஏ ஒத்து போகிறது. எனவே இறந்தவர் சரவணன் என உறுதியானது.
இந்த நிலையில்தான் சின்னப்பன், முருகன், சரவணன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications