அடேங்கப்பா.. செல்ல நாய் பிறந்த நாளை.. 100 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய கர்நாடக தொழிலதிபர்!
பெங்களூர்: கர்நாடகாவில் நாய் ஒன்றுக்குக் கொண்டாடப்பட்ட பிறந்த நாள் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
நாய்கள் எப்போதுமே மனிதர்களுக்குச் சிறந்த நண்பராக இழந்து வருகின்றன. நம்மைச் சுற்றி உள்ள மனிதர்கள் நம்மைக் கைவிட்ட போதிலும் நாய்கள் நம்மைக் கைவிடாது.
ஆபத்தான சூழ்நிலைகளில் தங்கள் உயிரிகளைத் துச்சம் என நினைத்துப் பல நேரங்களில் நாய்கள் நமக்கு ஓடோடி வந்து உதவி உள்ளன.

நாய்
அப்படிப்பட்ட நாய்களைப் பலரும் தங்கள் குடும்பங்களில் ஒரு நபராகவே கருதுகின்றனர். இதனால் தான் பல ஆயிரம் செலவழித்து நாய்களைப் பார்த்துக் கொள்வது, நாய்கள் உயிரிழந்தால் அதற்கு நினைவிடங்கள் கட்டும் வேலைகளைப் பலரும் செய்துள்ளனர். இந்தச் சூழலில் கர்நாடகாவில் ஒருவர் அனைவரையும் தூக்கிச் சப்பிடும் அளவுக்குச் செல்ல நாய்க்கு சப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார்.

நாய்
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் முதலாகி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவப்பா. இவர் தனது வீட்டில் பாதுகாப்புக்காக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய்க்குச் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் நாய்க்கு இவர் கேக் வெட்டியுள்ளார். அட இதில் என்ன பெரிய விஷயம் எனக் கேட்கிறீர்களா!

100 கிலோ கேக்
நாய்க்கு வெட்டப்பட்ட கேக் சுமார் 100 கிலோ எடை கொண்டது. நாயின் பிறந்த நாள் விழாவில் பலர் கலந்து கொண்டனர். மேலும், நாய் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 4000 பேருக்கு உணவும் கொடுக்கப்பட்டுள்ளது. நாயின் பிறந்த நாள் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நெட்டிசன்கள்
அதில் நாய் கேக் வெட்டுவதும், அப்போது அங்குக் கூடி இருந்தவர்கள் உற்சாகப்படுத்துவதும் தெரிகிறது. நெட்டிசன்கள் பலரும் செல்ல பிராணிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் தனது பிறந்த நாளுக்கு அரை கிலோ கேக் வாங்கி தரக் கூட இல்லை. ஆனால் இந்த நாய்க்கு 100 கிலோ கேக்கா என அங்கலாய்ப்பு படும் நெட்டிசன்களும் இருக்கவே செய்கிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications