100 ஆபாச வீடியோ.. 30 பெண்கள்.. இதுக்காகவே தனியாக சொந்த வீடு! மெடிக்கல் ஷாப் ஓனரால் ஆடிப்போன கர்நாடகா
பெங்களூரு: மெடிக்கல் ஷாப்புக்கு மருந்து வாங்க வரும் பெண்கள், பலரை ஏமாற்றி பலாத்காரம் செய்திருக்கிறார், அந்த மருந்துக்கடை ஓனர்.. பெரும்பாலும் பணத்தாசை காட்டியே அவர்களை ஏமாற்றி வன்கொடுமை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதான் கர்நாடக மாநிலத்தில் பகீரை கிளப்பிவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி டவுன் பகுதியில், மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார் அம்ஜத். இவருக்கு திருமணமாகிவிட்டது.. மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் பகுதியிலேயே, குடும்பத்துடன் வசித்து வருகிறார் அம்ஜத்..

மருந்துக்கடை: இந்த நிலையில் இவரது மருந்து கடைக்கு வரும் பெண்களை பணத்தாசை காட்டியும், அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்தும், தன்னுடைய வலையில் விழ வைத்திருக்கிறார்.. அத்துடன் அவர்களை பாலியல் வன்கொடுமையும் செய்து வந்துள்ளார்..
இதற்காகவே சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருக்கிறாராம் அம்ஜத்.. அந்த வீட்டுக்கு வரவழைத்து அப்பெண்களை சீரழித்துள்ளார்.. அத்துடன், அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அந்த பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் வரவழைத்து பாலியல் செய்து வந்திருக்கிறார்.
பலாத்காரம்: இப்படியே 30-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள், சென்னகிரி போலீசிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்திடமும் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில், உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டார்.
அதன்படியே, வழக்குப்பதிவு செய்த போலீசார் துரிதமான விசாரணையில் இறங்கினார்கள்.. இறுதியில், 30 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருந்தது உறுதியானது.. அதுமட்டுமல்லாமல், அவரது செல்போனில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். இதையடுத்து, அம்ஜத்தை கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
எச்சரிக்கை: ஆனால், அதற்குள் அம்ஜத் செல்போனிலிருந்த ஆபாச வீடியோக்கள் திடீரென சோசியல் மீடியாக்களில் பரவ தொடங்கிவிட்டது.. வாட்ஸ்அப் குரூப்களிலும் பரவி வைரலாகி விட்டது. இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், திடீரென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. "யாரும் ஆபாச வீடியோக்களை பகிரக்கூடாது , இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications