Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் பஞ்சாயத்தை கிளப்பிய புதிய தொழிலாளர் சட்டம்! குறைந்தபட்ச ஊதியத்தை இழக்கும் தொழிலாளர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அடிப்படை ஊதியம் என்பது மாற்றியமைக்கப்படும். ஆனால் கடந்த 2017-18லிருந்து இது மாற்றப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் இதனை மாற்ற அரசு தயாராகி வரும் நிலையில், தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு திருத்தியிருக்கிறது. இதனால் குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும் வரை, கர்நாடக அரசு காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 4 புதிய சட்ட திருத்தம், கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சட்ட திருத்தம் கர்நாடகாவில் 2 முக்கியமான பிரச்சனைகளை கிளப்பி இருக்கிறது.

Karnataka labour

அடிப்படை திறமை கொண்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.19,319 அளவுக்கும், திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.31,000 அளவுக்கும் அடிப்படை சம்பளத்தை உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டு இருந்தது. இதற்கான முன்மொழிவை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. விரைவில் மாநிலம் முழுவதும் இந்த அடிப்படை ஊதியத்தில் திருத்தம் அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் சட்டங்கள் இதனை தடுத்திருக்கின்றன.

அதாவது அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க மாநில அரசுக்கு உரிமை கிடையாது என்று, முதலாளிகள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். அதேபோல கர்நாடக அரசு முன்மொழிந்த திருத்தப்பட்ட ஊதியம் தொடர்பான அட்டவணையில், 81 வேலைகள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களில் அட்டவணைப்படுத்தப்பட்ட வேலைகள் என்கிற பிரிவே இல்லை. எனவே இந்த 81 வேலைகளில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை ஊதிய உயர்வு தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இரண்டாவது பிரச்சினை குறைந்தபட்ச ஊதியம் தொடர்பானது. குறைந்தபட்ச ஊதியம் தொழிலாளியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமானதாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய அளவு போதுமானதாக இல்லை என்பதே விமர்சனம்.

புதிய சட்டத்தின்படி குறைந்தபட்ச ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படும் வீட்டு வாடகை படி, குறிப்பிட்ட வரம்புக்குள் வைக்கப்படுகிறது. அதாவது உணவு மற்றும் ஆடை செலவுகளின் மதிப்பில் 10% வீட்டு வாடகைக்கான படியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொழிலாளி அடிப்படை உணவு மற்றும் ஆடை தேவைகளுக்காக ஒரு மாதத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை செலவு செய்வதாக அரசு கணித்திருக்கிறது. இந்த செலவில் இருந்து 10% வீட்டு வாடகை படியாக குறைந்தபட்ச ஊதியத்தில் கொடுக்க வேண்டும் என்று புதிய சட்ட திருத்தம் கூறுகிறது.

அப்படி எனில் ரூ.1,000 அல்லது ரூ.1,200 வீட்டு வாடகை படியாக கொடுக்கப்படும். இவ்வளவு 'பெரிய' தொகையை வைத்து பெங்களூரில் ஒரு சிறிய அறையைக் கூட வாடகைக்கு எடுக்க முடியாது. எனவே இது யதார்த்தத்திற்கு முற்றிலும் பொருந்தாததாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+