Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்து கடைக்காரரை இஸ்லாமியர்கள் தாக்கியதாக பாஜக புகார்.. கர்நாடக அரசு மறுப்பு.. போர்க்களமான பெங்களூர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் மசூதியில் தொழுகை ஒலிக்கும் நேரத்தில், அனுமன் பாடல்களை இசைத்ததாக கூறி இந்து மதத்தை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதாக பாஜக பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதில் இந்துக்களும் உள்ளதால் இது மதப் பிரச்சினை கிடையாது என்று கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விளக்கம் தந்துள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூரின் மத்திய பகுதியான அல்சூர் கேட் காவல் நிலைய எல்லையிலுள்ளது சித்தண்ணா லேஅவுட். இங்கு இந்து மதத்தை சேர்ந்தவர் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் 17ம் தேதி மாலையில் இவரது கடையில் அனுமான் பாடல்கள் சத்தமாக ஒலிக்கப்பட்டதாகவும், அப்போது கடை பக்கமாக நடந்து வந்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் இந்த பாடல்கள் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

Karnataka Minister explains that shopkeeper was not attacked in Bengaluru for playing Hanuman song

அதாவது, "மசூதியில் பாங்கு ஒலிக்கும் நேரம் இது. இப்போது அனுமன் பாடல்களை இசைக்கக்கூடாது" என்று வாக்குவாதத்தில் அந்த இளைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் எனவும், இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, கடையின் உரிமையாளரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர் என்றும் பாஜகவினர் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், இளைஞர்களின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, பாஜக தலைவர்கள், ஆளும் காங்கிரஸ் கட்சி இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதி எம்பியான தேஜஸ்வி சூர்யா, "கடையில் பஜனை பாடல்களை ஒலிபரப்பியதற்காக கடைக்காரர் தாக்கப்பட்டிருக்கிறார். பாங்கு ஒலிக்கும் நேரத்தில் பஜனை பாடல்களை இசைக்கக்கூடாது என்று கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸின் சமாதான அரசியலின் விளைவுதான் இது. சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜிஹாதிகளுக்கு கிடைத்த அரசியல் ஆதரவால், இயற்கையாகவே இந்துக்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நம் மாநிலத்தில் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஆனால், தேஜஸ்வி சூர்யாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. அம்மாநில அமைச்சரான தினேஷ் குண்டுராவ், "பாஜவினர் குறிப்பிடுவதை போல இது இந்து vs இஸ்லாமியர்களுக்கான சண்டை கிடையாது. பாங்கு ஒலிக்கும் நேரத்தில் பஜனை ஒலிக்கப்பட்டதற்காக கடைக்காரர் தாக்கப்படவில்லை.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் இந்து மதத்தைச் சேர்ந்த வாலிபர்களும் இருந்திருக்கிறார்கள். எனவே, இது எப்படி இந்து vs இஸ்லாமியர்கள் மோதலாக இருக்க முடியும்? அனுமன் பாடல்களை ஒலிக்கப்பட்டதற்காக, கடைக்காரர் தாக்கப்பட்டதாக யார் சொன்னது? இப்படியான முடிவுகளுக்கு உங்களை தள்ளியது எது?

சண்டையிட்டவர்களுக்கு சட்டப்படி தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பாஜகவின் இளம் தலைவர்கள் சாக்கடை அரசியலில், மலிவான அரசியலில் ஈடுபடுவதை பார்ப்பது வெட்கமாக இருக்கிறது" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதனிடையே இந்த விவகாரத்தை பாஜக லேசில் விடுவதாக இல்லை. பெங்களூரில் இன்று தேஜஸ்வி சூர்யா, ஷோபா கரந்தலாஜே போன்ற பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மக்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். பெரும் கூட்டத்தோடு வந்த இவர்கள், மோடி மோடி என்று கோஷமிட்டும், ராம நாமத்தை ஜெபித்தும் போராட்டம் நடத்தினர்.

இவ்விருவருமே பெங்களூரில் முறையே, தெற்கு மற்றும் வடக்கு லோக்சபா தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களாகும். எனவே இதை தேர்தல் யுக்தியாக பாஜக வேட்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

இதனிடையே, தேஜஸ்வி சூர்யா மீது மத கலவரத்தை தூண்டிய பிரிவின்கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி அணுகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+