"ஆடு பாம்பே.. இல்லி நோடு பாம்பே".. மக்களுக்கு மத்தியில் ஸ்நேக் டான்ஸ் ஆடிய கோடீஸ்வர அமைச்சர்!
பிரச்சாரத்தின்போது பாம்பு நடனம் ஆடி அமைச்சர் நாகராஜ் வாக்கு சேகரித்தார்.
Recommended Video

பெங்களூரு: லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ் போய்.. பாம்பு டான்ஸ்.. பாம்பு டான்ஸ் வந்துவிட்டது. நம்ம ஊர்ல பாம்பு பாட்டுன்னாலே "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா" இது ஒன்றுதான் நமக்கு தெரியும். ஆனா கர்நாடகாவிலே வேற லெவல் பாம்பு டான்ஸ்! அதுவும் ஒரு அமைச்சரே ஆடியிருக்கிறார்!
கர்நாடகாவின் வீட்டு வாரிய அமைச்சராக இருப்பவர் எம்.டி.பி. பிரசாத் நாகராஜ். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மிகப் பெரிய கோடீஸ்வரர்.
முன்னாள் மத்திய மந்திரி மற்றும் சிக்கபல்லபுரா மக்களவை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரான வீரப்ப மொய்லிக்கு ஆதரவாக ஹோஸ்கொட்டே நகருக்கு ஓட்டு கேட்க வந்தார். அவருடன் ஆதரவாளர்களும் திரண்டு வந்தனர்.

பாம்பு டான்ஸ்
மக்களிடம் வாக்கு கேட்டுகொண்டிருந்த நாகராஜ் திடீரென டான்ஸ் ஆட ஆரம்பித்தார். தன்னுடைய பெயர் நாகராஜ் என்பதாலா என்று தெரியவில்லை.. பாம்பு டான்ஸ்தான் ஆடினார். "நாகின்" என்ற திரைப்பட பாட்டு இசைக்கப்பட்டதும் கையை காலை பாம்பு மாதிரியே வளைச்சு வளைச்சு ஆடினார்.
|
10 நிமிடம் டான்ஸ்
சும்மா சொல்லக் கூடாது, பாம்பே பார்த்து மிரண்டு போகும் அளவுக்கு அவரது பாடி லாங்குவேஜ் பக்காவாக இருந்தது. நாகராஜை பார்த்ததும் அவருடன் வந்தவர்களும் அதேபோல பாம்பு டான்ஸ் ஆடினார்கள். ஆதரவாளர்களுடன் நாகராஜ் பின்னிப்பிணைந்த இந்த பாம்பு நடனம் 10 நிமிடம் அரங்கேறியது.

நாகராஜ் நடனம்
அதாவது பிரச்சாரக் கூட்டம் கடைசியில் பாம்புக் கூட்டமாக மாறி விட்டதோ என்று மலைக்கும் அளவுக்கு மிரட்டி விட்டனர் நடனத்தில். பிரச்சாரத்தின்போது இந்த பாட்டை வாசிப்பதற்கென்றே ஒரு மியூசிக் ட்ரூப் நாகராஜ் கூடவே சென்று வருவது போல தெரிகிறது. இந்த பாம்பு டான்ஸ் இப்போது இணையத்திலும் உள்ளே புகுந்து "படம்" காட்டி வருகிறது.

கண்ணை கட்டுதே...
ஓட்டு வாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு.. ஆனால் தேர்தலுக்குப் பிறகு மக்களை இவங்க ஆட்டுவிப்பாங்க பாருங்க.. அதை நினைச்சாதான் கண்ணு வேர்க்குது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications