"அல்லாஹு அக்பர்.." என மாணவி கோஷமிட்டதன் பின்னணியில் தூண்டுதலா? கேட்பது கர்நாடக கல்வி அமைச்சர்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மண்டியாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் வந்த முஸ்கன் அல்லாஹ் ஹூ அக்பர் என முழங்கியதை கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி சி நாகேஷ் விமர்சித்துள்ளார். மேலும் மத ரீதியிலான எந்த முழக்கத்தையும் கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரிதாகி வருகிறது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் ஹிஜாப் வெர்சஸ் காவித் துண்டு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி முஸ்கன் மண்டியாவில் உள்ள கல்லூரிக்குள் சென்றார்.
அப்போது அங்கிருந்த இந்துத்துவா மாணவர்கள் அந்த பெண்ணை ஹிஜாப்பை அகற்றிவிட்டு உள்ளே வருமாறு கூறினர். ஆனாலும் அந்த பெண் தனியொருவராக அச்சமின்றி உள்ளே நுழைந்தார்.

மாணவர்கள்
அவர் பாட்டுக்கு கல்லூரி கட்டடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நிறைய மாணவர்கள் கழுத்தில் காவி துண்டுடன், கைகளில் காவி கொடியுடன் அந்த மாணவியை முற்றுகையிட்டு ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர். எனினும் அந்த மாணவி முன்னோக்கி சென்று கொண்டே இருந்தார்.

ஜெய்ஸ்ரீராம்
ஆனாலும் அவர்கள் விடாமல் அந்த மாணவியின் பின்னால் ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்டு விரல்களை உயர்த்தினர். இதனால் முஸ்கன் தைரியமாக அல்லாஹ் ஹூ அக்பர் என ஆக்ரோஷமாக கத்தினார். பின்னர் கல்லூரி முதல்வரும் கல்லூரி ஊழியர்களும் அங்கு வந்து அந்த மாணவியை பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர்.

கர்நாடகா அமைச்சர்
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரவி வைரலானது. இது குறித்து கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி சி நாகேஷ் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், முஸ்கன் வெளியே இருந்து உள்ளே வந்துவிட்டார். அவரை மாணவர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

அல்லாஹ் ஹூ அக்பர் ஏன்?
அப்போது முஸ்கன் அல்லாஹ் ஹூ அக்பர் என முழங்கினார். அவரது பின்னால் மாணவர்களே இல்லாத போது அவர் எதற்காக அவ்வாறு முழங்க வேண்டும்? ஒரு கல்லூரியில் அந்த முழக்கத்தை பயன்படுத்துவதன் நோக்கம் என்ன? அங்கு முழக்கத்திற்கான அவசியம் என்ன? மாணவி தூண்டப்பட்டாரா? அல்லா ஹூ அக்பர் அல்லது ஜெய்ஸ்ரீ ராம் எந்த கோஷமாக இருந்தால் அதை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications