ஆசையாக டின்னர் சாப்பிட்ட மாணவர்கள்.. நள்ளிரவில் வாந்தி, மயக்கம்! 137 பேருக்கு உடல்நிலை பாதிப்பு
ஹாஸ்டல் உணவைச் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஹாஸ்டல் உணவைச் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் ஹாஸ்டலில் இருந்து படிக்கும் மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோருக்கு அங்குச் சமைக்கப்படும் உணவுகள் ஒத்தே வராது.. இதன் காரணமே பலரும் விடுதியில் இருக்க யோசிப்பார்கள்.
ஹாஸ்டலில் இருந்து படிக்கும் மாணவ, மாணவிகள் பலருக்கும் கூட அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது. சில நேரங்களில் விடுதிகளில் சாப்பிடும் உணவால் புட் பாய்சன் கூட ஏற்படும் ஆபத்து உள்ளது.

கர்நாடகா
அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. அங்கு ஹாஸ்டல் உணவைச் சாப்பிட்ட 137 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவின் சக்திநகர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குப் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

என்ன நடந்தது
நேற்று மதியம் அந்த மாணவர்கள் வழக்கம் போல தங்கள் ஹோஸ்டல் மெஸ்ஸில் உணவு சாப்பிட்டுள்ளனர். இதை உண்ட மாணவர்களுக்குப் புட் பாய்சன் ஏற்பட்டதாகத் தெரிகிறது.. இதனால் ஒரே நேரத்தில் பலருக்கும் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைச் செய்து வருகின்றனர். இப்படி ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு புட் பாய்சன் ஆக என்ன காரணம் என்பதைக் கண்டறிய முயன்று வருவதாக மங்களூரு போலீஸ் கமிஷனர் என் சஷி குமார் தெரிவித்துள்ளார்.

வரிசையாக பலருக்கும் பாதிப்பு
அதிகாலை 2 மணி அளவில் வரிசையாகப் பல மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. முதலில் ஏதோ ஒரு சில மாணவர்களுக்கு உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்ற நினைத்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்ட பிறகே இது மோசமான பாதிப்பு என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். நேற்றிரவு ஹாஸ்டல் உணவைச் சாப்பிட்ட மாணவர்கள் பலருக்கும் புட் பாய்சன் ஆகியுள்ளது.

அனுமதி
மாணவர்கள் பலருக்கும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் சிட்டி மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் உடல்நிலை மோசமான நிலையில், அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் அந்த கல்வி நிறுவனம் இறங்கியுள்ளது.

ரொம்ப மோசம்
ஏஜே மருத்துவமனையில் 52 மாணவர்களும், முல்லர் மருத்துவமனையில் 42 பேரும், கேஎம்சியில் 18 பேரும், யூனிட்டி மருத்துவமனையில் 14 பேரும், சிட்டி மருத்துவமனையில் 8 பேரும், மங்களா மருத்துவமனையில் 3 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications