கணிப்புகளால் களேபரம்: கர்நாடகாவில் மீண்டும் தொங்கு சட்டசபை? கிங் மேக்கராக ஜேடிஎஸ்?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தொங்கு சட்டசபைக்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அப்படி தொங்கு சட்டசபை உருவானால் வழக்கம் போல ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராக உருவெடுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கர்நாடகா தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக 6 கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என 2 கருத்து கணிப்புகளும்; பாஜகவே ஆட்சியைத் தக்க வைக்கும் என 2 கருத்து கணிப்புகளும் தெரிவித்திருந்தன.
டிவி9 - சிவோட்டர் கருத்து கணிப்பானது காங்கிரஸ் கட்சிக்கு 106 முதல் 116 இடங்கள் கிடைக்கும்; பாஜகவுக்கு 79-89; ஜேடிஎஸ் கட்சிக்கு 24 முதல் 34 இடங்கள் கிடைக்கும் என கூறியிருந்தது.
பப்ளிக் டிவி கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 98-108 இடங்கள்; பாஜகவுக்கு 85-95 இடங்கள்; ஜேடிஎஸ் கட்சிக்கு 28-33 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஏசியா நெட்- சுர்வர்ணா நியூஸ் ஜன் கி பாத் கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 98-109 இடங்கள்; காங்கிரஸ் 89-97 இடங்கள்; ஜேடிஎஸ் 25-29 இடங்கள் கிடைக்கும் என கணித்தது.
நியூஸ் பர்ஃஸ்ட்-மேட்ரிஸ் கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 96-106 இடங்கள்; காங்கிரஸ் கட்சிக்கு 84-94 இடங்களும் ஜேடிஎஸ் கட்சிக்கு 29 முதல் 34 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டது.
விஸ்தாரா நியூஸ் கருத்து கணிப்பின்படி, பாஜகவுக்கு 88-93 இடங்கள்; காங்கிரஸ் கட்சிக்கு 84-90 இடங்கள்; ஜேடிஎஸ்-க்கு 23-26 இடங்கள் கிடைக்குமாம்.
தி சவுத் பர்ஸ்ட்- பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 98 ( 95 முதல் 105 இடங்கள்), பாஜகவுக்கு 95 இடங்கள் (90-100 இடங்கள்) ஜேடிஎஸ் கட்சிக்கு 27 (25 முதல் 30 இடங்கள்) கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய கருத்து கணிப்பு முடிவுகளை ஒப்பீடு செய்யும் போது 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகளைப் போல கர்நாடகாவில் மீண்டும் தொங்கு சட்டசபைக்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என்றுதான் தெரிகிறது.
2018-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78; ஜேடிஎஸ் 37 இடங்களில் வென்றிருந்தன. காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.
தற்போதும் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் வழக்கம் போல ஜேடிஎஸ் கட்சி, கிங் மேக்கராக உருவெடுப்பதை தவிர்க்க முடியாதது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications