கர்நாடகாவில் ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு.. கலபுராகி, பெலெகாவியில் 7 பேர் மரணம்
பெங்களூரு: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கர்நாடக மாநிலம் கலபுராகி, பெலெகாவியில் 7 பேர் ஒரே நாளில் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் ஏற்கனவே தமிழகத்தில் ஈரோடு மாவட்ட எல்லையை ஒட்டிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 24 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியாகி இருந்த நிலையில் மேலும் 7 பேர் பலியாகி உள்ளது அங்குள்ள மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏராளமானோர் ஆக்ஸிஜன் வசதி, ஐசியு படுக்கை வசதி கிடைக்காமல் தவிக்கிறார்கள். உயிரிழப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.

நோயாளிகள் அதிகம்
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்று காலை கலாபுராகி அரசு மருத்துவமனையில் நான்கு பேரும், பெலகாவி அரசு மருத்துவமனையில் மூன்று பேரும் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோசமான நிலை இல்லை
ஆனால் இருப்பினும், கலபுராகி மாவட்டத்தின் பொறுப்பாளரான சுரங்க மற்றும் புவியியல் துறை அமைச்சர் முருகேஷ் நிரானி, இறந்தவர்களுக்கு கொரோனா தொற்று மோசமான நிலையில் இருந்தாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

28 பேர் மரணம்
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களில் 24 கோவிட் -19 நோயாளிகள் இறந்த அடுத்த ஓரிரு நாளில் நடந்த இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தை உலுக்கி உள்ளது. இதனிடையே செவ்வாய்க்கிழமை சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு பயணம் செய்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள் காலை வரை 28 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியாகி உள்ளனர். இறந்தது 23 பேர் என்று கூறுவது பொய்யான தகவல் என்றார்.

சித்தராமையா
இந்த சம்பவம் ஆளும் பாஜகவின் மோசமான நிர்வாகத்திறனை பிரதிபலிப்பதாக சித்தராமையா குற்றம் சாட்டினார், மேலும் COVID-19 நிலைமையை சரியாக கையாளாத சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் அப்பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கோரினார்.

பொறுப்பாளராக நியமனம்
இதனிடையே ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீவிரமாக கருத்தில் கொண்டு, கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை ஆக்ஸிஜன் விநியோகத்தை ஏற்பாடு செய்யவும், மாநில அரசாங்கத்தின் ஆக்ஸிஜனைப் பெற மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் குழுவிற்காக பொறுப்பாளராக நியமித்துள்ளார்.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு
இதற்கிடையில், பெங்களூரில் ஒரு சில மருத்துவமனைகள் ஆபத்தான ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.. யெலஹங்காவில் உள்ள சைதன்யா மருத்துவ மனையின் நிர்வாகி, கூறுகையில் "இப்போது எங்களுக்கு ஆக்சிஜன் இருப்பு கிடைத்துள்ளது, இது இரண்டு முதல் மூன்று நாட்கள் நீடிக்கும், ஆனால் நாங்கள் எங்கள் நோயாளிகள் அனைவரையும் நேற்று மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றினோம், ஏனெனில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆக்ஸிஜன் பங்கு தீர்ந்துவிட்டது" என்றார். பெங்களூருவின் ஆர்.டி.நகரில் உள்ள மெடாக்ஸ் மருத்துவமனைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தெரிவித்துள்ளன. இதேபோல் பல்வேறு மருத்துவமனைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்துள்ளன,
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications