கர்நாடகாவில் மருந்து கடைக்காரரின் 100 ஆபாச வீடியோ! பங்களாவில் சிக்கிய பரிதாப பெண்கள்.. போலீஸ் அதிரடி
பெங்களூரு: மெடிக்கல் ஷாப்புக்கு மருந்து வாங்க வரும் பெண்கள், பலரை ஏமாற்றி பலாத்காரம் செய்திருக்கிறார், அந்த மருந்துக்கடை ஓனர்.. பெரும்பாலும் பணத்தாசை காட்டியே அவர்களை ஏமாற்றி வன்கொடுமை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதான் கர்நாடக மாநிலத்தில் பகீரை கிளப்பிவிட்டுள்ளது
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி டவுன் பகுதியில், மருந்துக்கடை வைத்து நடத்தி வரும் அம்ஜத் ஏன்பவர், திருமணமானவர். தன்னுடைய மருந்து கடைக்கு வரும் பெண்களை பணத்தாசை காட்டியும், அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்தும், தன்னுடைய வலையில் விழ வைத்துள்ளார் அம்ஜத். அவர்களை பாலியல் வன்கொடுமையும் செய்து வந்துள்ளார்..

இதற்காகவே சொந்தமாக வீடு வாங்கி, அதை உபயோகித்து வந்துள்ளார். அந்த வீட்டுக்கு வரும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன், அதை வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டுள்ளார்.. பிறகு அதே பெண்களை மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு மிரட்டி வரழைத்து பலாத்காரம் செய்துள்ளார். இப்படியே 30-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்ஜத்தால், சீரழிந்திருப்பதாக கூறப்படுகிறது..
சென்னகிரி: இதனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள், சென்னகிரி போலீசிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்திடமும் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில், உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில், அம்ஜத் குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. தாவணகெரே மாவட்டம் சென்னகிரி டவுன் பகுதியில், மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறார் அம்ஜத்.. 50 வயதாகிறது.. மருந்து கடைக்கு வரும் பெண்களிடம் நைசாக பேச்சு தந்து, அவர்களது பொருளாதார சூழ்நிலையை தெரிந்து கொள்வாராம். பிறகு அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து, பணத்தாசை காட்டியே பெண்களை ஏமாற்றியிருக்கிறார்.
நிதி நெருக்கடி: மெடிக்கல் ஷாப்புக்கு வரும் பெண்களுக்கு, மருத்துவ உதவி செய்வதுபோல பேசி, முதலில் அவர்களது போன் நம்பரை வாங்கி கொள்வாராம். பிறகு நிதியுதவி செய்வதுபோல, நெருக்கம் காட்டுவாராம். குடும்ப வறுமையால் இவரிடம் பல பெண்கள் சிக்கி ஏமாந்துள்ளனர்..
அந்த பெண்களை மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோக்கள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியதுமே, மாவட்ட எஸ்பி உமா பிரசாந்த், இந்த வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம். மீறி பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ரகசிய வீடியோக்கள்: இதுமட்டுமல்லாமல், தான் எந்த பெண்ணை விரும்பினாலும், அவர்களுக்குத் தெரியாமல் போட்டோ அல்லது வீடியோவை எடுத்து கொள்வாராம்.. அதேபோல, சில பெண்கள் குளிப்பதையும் ரகசியமாக பதிவு செய்துள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்..
பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள், தெருவில் சீரற்ற முறையில் நடந்து செல்லும் பெண்கள் போன்ற வீடியோக்களை அந்த நபர் பதிவு செய்ததாகவும், இந்த வீடியோக்கள் அனைத்தையும் தனிமையில் பார்த்து ரசித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இப்போது அனைத்து வீடியோக்களும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து அம்ஜத்திடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட அம்ஜத் பள்ளி மாணவி உட்பட 30க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருந்தது உண்மை என தெரியவந்தது.. பிறகு, அவரது செல்போனில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினர்.
புலனாய்வு போலீசார்: கைதான முகமது அம்ஜத் மீது தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் 67,67 (ஏ) மற்றும் 67 (பி) பிரிவுகள் மற்றும் 77,294 மற்றும் 64 பிரிவுகள் உள்ளிட்ட சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், பிரிவுகள் 4,6,14 மற்றும் 15ன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications