ஹிஜாப்பை தொடர்ந்து திப்பு சுல்தான்.. கர்நாடக பாடத் திட்டத்தை மாற்றியமைக்க பரிந்துரை.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 18ம் நூற்றாண்டில் மைசூருவை ஆட்சி செய்த திப்பு சுல்தான் தொடர்பான பாடங்களில் அவரை புகழும் பகுதிகளில் திருத்தம் மேற்கொள்ள நிபுணர் கமிட்டி சார்பில் கர்நாடக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சராக பிசி நாகேஷ் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் குஜராத்தை தொடர்ந்து கர்நாடக பள்ளிகளிலும் பகவத் கீதையை பாடமாக்கும் திட்டம் துவக்க நிலையில் உள்ளது. கர்நாடக அரசு, பாடநூல் கழகம், நிபுணர் குழு அனுமதி அளிக்கும் பட்சத்தில் பகவத்கீதையை பாடமாக சேர்க்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

பாடங்கள் மாற்ற முடிவு

பாடங்கள் மாற்ற முடிவு

இதன் தொடர்ச்சியாக தற்போது கர்நாடக பள்ளிகளில் உள்ள பாடப்புத்தகங்களில் பாடங்களை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வலதுசாரி சிந்தனை கொண்ட எழுத்தாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி ஆராய்ந்து அறிக்கை ஒன்றை கர்நாடக பள்ளி கல்வித்துறைக்கு சமர்பித்துள்ளனர்.

அறிக்கை தாக்கல்

அறிக்கை தாக்கல்

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் கூறுகையில், ‛‛பாட்பபுத்தகங்களில் மாற்றம் செய்வது தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை பெற்றுள்ளேன். அதன்படி ஆலோசித்து மாற்றங்கள் செய்யப்படும்''என்றார். குழுவின் பிற பரிந்துரைகள் குறித்த விபரங்களை அவர் கூற மறுத்துவிட்டார்.

பாடம் நீக்கம்

பாடம் நீக்கம்

இந்நிலையில் தான் 18ம் நூற்றாண்டில் மைசூருவை ஆட்சி செய்த திப்பு சுல்தான் தொடர்பான பாடங்களில் அவரை புகழும் வகையில் உள்ள சில பகுதிகளை மாற்ற அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் வடகிழக்கு இந்தியாவை 600 ஆண்டுகளாக ஆண்ட அஹோம் வம்சத்தினர் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளை ஆண்ட கர்கோடா வம்சத்தினர் குறித்த பாடங்களை சேர்க்கவும், தென்னிந்தியாவின் அயோத்தி என்று அழைக்கப்படும் பாபா புடன்கிரி மற்றும் தத்தபீடம் குறித்த பாடங்கள், காஷ்மீர் வரலாறு உள்ளிட்டவற்றை பாடங்களாக சேர்க்க கமிட்டி பரிந்துளைரத்துள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

காங்கிரஸ் எதிர்ப்பு

இதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான யுடி காதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "திப்புசுல்தான் தொடர்பான பாடங்களை புத்தகத்தில் இருந்து நீக்குவதை நீங்கள் (ஊடகங்கள்) கர்நாடக அரசிடம் கேட்க வேண்டும். மேலும் திப்பு சுல்தான் தொடர்பான எந்த குறிப்பை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கினாலும் உண்மையை மறைக்க முடியாது. லண்டன் அருங்காட்சியம், ஸ்ரீரங்கப்பட்டணா, தேவனஹள்ளி இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது திப்பு சுல்தான் பெருமை நினைவு கூறப்படும்'' என்றார்.

 யார் இந்த திப்பு சுல்தான்

யார் இந்த திப்பு சுல்தான்

1750-1799 வாழ்ந்த மைசூர் ஆட்சியாளர் தான் திப்பு சுல்தான். இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் என்றும், 'மைசூர் புலி' என்றும் கூறுகின்றனர். இன்னொரு தரப்பினர் மதமாற்றம், கொலை குற்றச்சாட்டுகளை அவர் மீது கூறி வருகின்றனர். இவர் தொடர்பாக அடிக்கடி காங்கிரஸ், பாஜக அரசியல் கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் எழுவதும் உண்டு.

 இதற்கு முன்பு என்ன

இதற்கு முன்பு என்ன

கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது முதல்வர் சித்தராமையா திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவை திப்பு ஜெயந்தி பெயரில் 2015 முதல் கொண்டாடியது. இதை 2019ல் பாஜக ஆட்சியின்போது முதல்வர் எடியூரப்பா ரத்து செய்தார். மேலும் கொரோனா காலத்தில் மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில் 7 ம் வகுப்பு புத்தகத்தில் திப்பு சுல்தான் தொடர்பான பாடம் கைவிடப்பட்பட்டது. இருப்பினும் 6 மற்றும் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் திப்பு சுல்தான் தொடர்பான பாடங்கள் இடம்பெற்றன.

 பிரச்சனைகளுக்கு நடுவே...

பிரச்சனைகளுக்கு நடுவே...

ஏற்கனவே கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனை, கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிப்பு உள்ளிட்ட சில பிரச்சனைகள் கர்நாடகத்தில் உள்ள நிலையில் தான் திப்பு சுல்தான் தொடர்பான பாடங்களில் சில பகுதிகளை நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+